மேலும் அறிய

ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி

வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும், 2026 ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - இ.பி.எஸ்

2026 ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” - இ.பி.எஸ் பேட்டி .
 
ஏன் விக்கிரவாண்டியில் போட்டியில்லை  - இ.பி.எஸ்., பதில்
 
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானம் மூலம் வந்த எடப்பாடி பழனிசாமி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”அ.தி.மு.க.வுக்கும் ப.சிதம்பரத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது, அ.தி.மு.கவில் எடுத்திருக்கக் கூடிய முடிவு. அவருடைய கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.  தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடந்தவை உங்களுக்கு தெரியும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல் அடைத்து வைத்து தி.மு.க கொடுமைப்படுத்தியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மாநில அரசுக்கு துணை போனது. இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம் பண பலத்தை பயன்படுத்தி அதிகமான பரிசு பொருள் கொடுத்து தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர். ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் அ.தி.மு.கவுக்கு 6000 வாக்குகள் குறைவாகத்தான் கிடைத்தது. விக்கிரவாண்டி எடுக்குறதுக்கு திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை வாரி இரைப்பார்கள்,பூத் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணத்தை கொடுப்பார்கள், விக்கிரவாண்டியின் ஜனநாயக படுகொலை நடைபெறும். சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது. ஆகவேதான் விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை.
 
வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும்
 
2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 38 இடங்களை பிடித்தது. 2021 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களை பிடிக்கும் எனக் கூறினார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களை பிடித்தது. ஆகவே சட்டமன்றத் தேர்தல் வேறு நாடாளுமன்ற தேர்தல் வேறு.  மக்கள் தேர்தல்களை பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள், 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் நிலக்கோட்டையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்த அளவுக்கு மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரித்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். 2014 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகக் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது, ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை, அதுபோலத்தான் மாறி மாறி வெற்றி தோல்விகள் கிடைக்கும். அரசியல் கட்சிகளை பொறுத்த அளவுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரக் கிடையாது.  வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும், 2026 ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என கூறினார்
 
தலைப்பு செய்திகள்

பழனி ரூ.100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் பெண் ஊழியர், வழக்கறிஞர் கைது!
பழனி ரூ.100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் பெண் ஊழியர், வழக்கறிஞர் கைது!
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
Embed widget