‛தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட வஞ்சனை சரிசெய்யப்பட்டுள்ளது’ அணுசக்தி துறைக்கு நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி!
”ஓராண்டு ஆனாலும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் வஞ்சனைகளில் ஒன்றை சரி செய்ய முடிந்துள்ளது” -சு.வெங்கடேசன் ட்வீட்
அணுசக்தி துறை நிர்வாகிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் . அதில்..,” அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். முருகையா அவர்களிடம் இருந்து மே 11, 2022 அன்று கடிதம் வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் வஞ்சனை குறித்து நான் எடுத்த பிரச்னை ஒன்றில் தீர்வு கிட்டி இருக்கிறது. ஒன்றிய அரசின் தேர்வு மையங்களில் தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை குறிப்பிட்டு நான் 29.06.2021 இல் ஒரு கடிதம் எழுதி இருந்தேன்
எமது கோரிக்கை வெற்றி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 14, 2022
அணுசக்தி துறை,
கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்தது.
கடுமையாக எதிர்த்தேன்.
இந்த ஆண்டு தூத்துக்குடி வளாகத்திலேயே தேர்வு மையம் அமைத்து, நேர்காணலும் நடத்தி முடித்துள்ளது.
எமது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நியதிக்காக நன்றி. pic.twitter.com/JCp8CafWMY