BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
எந்த கட்சிக்கு திமுகவை தோற்கடிக்கும் எண்ணம் இருக்கிறதோ அவர்கள் வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் திமுகவை வீழ்த்த நினைப்போர் கூட்டணிக்கு வரலாம்- பாஜக.

பிரதமர் பல வேலைகளுக்கு நடுவே தொடர்ந்து தமிழகம் வருகிறார். பட்ஜெட்டில் பல திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி பலமான வலுவான கூட்டணி , எங்களை பார்த்து எதிர்க் கட்சிகள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக மீது பாசம் காட்டுவது போல் திமுக காட்டிக் கொள்கிறது
அதிமுக - பாஜக தலைவர்கள் மட்டுமல்ல, தொண்டர்களும் இணைந்து செயல்படுகின்றனர். திமுக கூட்டணியில் பல சிக்கல் இருப்பதால் அவசர கதியில் தொகுதி பங்கீடு செய்துள்ளனர்.
குழாயடி சண்டை
திமுக கூட்டணியைப் போல் குழாயடி சண்டை எங்கள் கூட்டணியில் இல்லை. திமுக கூட்டணியில் பல சிக்கல் இருப்பதால் அவசரகதியில் தொகுதி பங்கீடு செய்துள்ளனர்.
தனி நபர் எந்தக் கட்சியிலும் சேர்வது அவரது விருப்பம். ஆனால் தனக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , தன்னை முதல்வராக்கி அழகுபார்த்த இயக்கத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் சுயநலத்தால் திமுகவில் இணைந்து விட்டார் , திமுகவில் இணைந்தது ஓ. பன்னீர் செல்வத்துக்கு சாபக் கேடாக அமைய உள்ளது
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் சூழலில் திமுக அரசு இல்லை. இந்தத் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தேர்தல். திமுக பொய் புரட்டால் ஆட்சிக்கு வந்தது.
திமுகவுக்கு தோல்வி பயம்
திடீரென திமுகவிற்கு அதிமுக மீது பாசம் ஏன்? கடந்த 2 வாரமாக திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் அதிமுக மீது பாசம் வந்துள்ளது.
திருமாவளவன் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஏன் வாய் திறக்கவில்லை? இந்தியா மீது இல்லாத அக்கறை இப்போது ஈரான் மீது ஏற்பட்டுள்ளது. அவருக்கு விமான டிக்கெட் எடுத்து தருகிறேன் , அமெரிக்கா சென்று போராடிக் கொள்ளட்டும்.
திமுக தேர்தலுக்கு முன் சிலிண்டர் மானியம் தருவதாக வாக்குறுதி கூறினர், ஆனால் அதை செய்யவில்லை.. மத்திய அரசு தனித்து சிலிண்டர் விலையை உயர்த்த முடியாது, அது சர்வதேச சூழல் சார்ந்தது. வளைகுடா நாடுகளில் போர் மூண்டுள்ள நிலையில் மக்களை பாதுகாக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.
தவெக கூட்டணிக்கு வருமா?
தவெக வருமா என்று கேட்கிறீர்கள். வெற்றிக் கூட்டணியை நோக்கி பல கட்சிகள் வர உள்ளதாக கூறுவது வழக்கம். யார் வேண்டுமானாலும் வேட்பு மனுத் தாக்கல் வரை கூடக் கூட்டணியில் சேரலாம்.
எந்த கட்சிக்கு திமுகவை தோற்கடிக்கும் எண்ணம் இருக்கிறதோ அவர்கள் வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் திமுகவை வீழ்த்த நினைப்போர் கூட்டணிக்கு வரலாம்.
இஸ்ரேல், அமெரிக்கா , ரஷ்யா என இந்தியா பல நாடுகளுடன் நட்பாக உள்ளது. கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை நம் விருப்பத்தின்படிதான் பல்வேறு நாடுகளிடம் இருந்து வாங்கி வருகிறோம். பிரதமர் நிகழ்ச்சிக்கு காவல்துறை உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’.
இவ்வாறு பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் பேசினார்.
























