தேனி : உட்கட்சி விவகாரத்தால் திணறும் தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக.. கட்சியினரிடையே சலசலப்பு
உட்கட்சி தேர்தல் சத்தமில்லாமல் நடத்தப்பட்டும் நிர்வாகிகள் அறிவிக்கப்படாததால் தேனி மாவட்ட திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி தெற்கு மாவட்டத்தில் தி.முகவினர், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். தேனி வடக்கு மாவட்டத்தில் மறைமுகமாக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி மாவட்ட திமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வார்டு செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் என எந்தப் பட்டியலும் இன்னும் அறிவிக்கப்படாததால் போட்டியிட்ட நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தேனி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் சமீபத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தலைமை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க.வினர் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அப்பதவிகளை ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டது. ஆனால், பல இடங்களில் நிர்வாகிகள் ராஜினாமா செய்யவில்லை. ராஜினாமா செய்யாத இடங்களில் திமுக தலைமை நடவடிக்கை மேற்கொண்டது. அந்தவகையில், தேனி நகர செயலாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகர பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இந்த நிர்வாகிகள் முந்தைய தேர்தல்களில் சிறப்பாகப் பணியாற்றி தி.மு.கவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர்கள் என தலைமைக்கு கூறப்பட்டுள்ளது. அதனால் இவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Vikram Audio Launch: ரெடியாகுங்க! இசை, ட்ரெய்லர் அப்டேட்: தேதி, இடத்தை அறிவித்த விக்ரம் படக்குழு!
ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை ஆட்களை நிறுத்தி குழப்பம் ஏற்படுத்தி கட்சி தலைமைக்கு சங்கடத்தை விளைவித்தவர்களுக்கே மீண்டும் பொறுப்பு வழங்கினால் கட்சி கட்டுப்பாடு குலையும் என மூத்த கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த பிரச்சனை காரணமாகவே தேனி வடக்கு மாவட்ட தி.மு.கவில் உட்கட்சி தேர்தல் முடிந்தும் இன்னும் நிர்வாகிகள் விவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுகு தீர்வு காண கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தேனிக்கு வருகை தர இருப்பதாகவும், அவர்கள் ஆலோசித்த பின்பும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மீண்டும் அந்த நிர்வாகிகளுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்