மேலும் அறிய

’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!

'சமூக வலைதள கமெண்டுகளுக்கு கால்கடுக்க நின்று விளக்கம் தரும் ஆதவ் அர்ஜூனா, கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு மட்டும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கடந்துப்போனார்’

கொள்கை எதிரி என பிரகடனப்படுத்திய பாஜகவுடன் விஜய், கூட்டணி வைக்கப்போவதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு விஜய் தரப்பில் இருந்து உறுதியான மறுப்பு இதுவரை எதுவும் வெளிவராதது, அப்படியான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்றுவருமோ என்ற சந்தேகத்தை தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கே ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜகவை கண்டு பயப்படுகிறாரா விஜய் ?

தொடக்கத்தில் பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசி வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு  அவரது நடவடிக்கைகள் மாற்றம் ஏற்பட்டது. பாஜக என்ற வார்த்தையை குறிப்பிடுவதை கூட விஜய் தவிர்க்கத் தொடங்கினார். குறிப்பாக, சிபிஐ விசாரணைக்கு டெல்லிக்கு சென்று ஆஜராகிவிட்டு வந்த பின்னர், பாஜக குறித்து விமர்சிப்பதையும் பேசுவதையும் கூட அவர் நிறுத்திக்கொண்டார்.  அதற்கு காரணமாக, இப்போது நடைபெறவுள்ளது சட்டமன்ற தேர்தல் என்றும் தமிழ்நாட்டை ஆளப்போவர்களுக்கு இடையேயான போட்டிதான் இது என்று திமுகவை மட்டும் விமர்சிப்பதற்கு ஒரு பெரிய உருட்டு உருட்டினார்.

நடிகராக இருக்கும்போதே நரேந்திரமோடியை சந்தித்த விஜய்

பாஜகவின் பி டீமாகதான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றும் அவர் நடிகராக இருக்கும்போதே நரேந்திரமோடியை சந்தித்து தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேசியிருக்கிறார் எனவும் அவரது எதிரணியினரும் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில்தான், பாஜகவுடன் விஜய் கூட்டணி சேரவுள்ளதாகவும் இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வரும் விஜயின் நண்பருமான நடிகர் பவன் கல்யாண், தூதுப் புறாவாக மாறி பேசி வருகிறார் என்றும் செய்திகள் பரபரவென வெளியாகத் தொடங்கின.

உறுதியாக மறுக்காத விஜய்  - நடக்கப்போவது என்ன ?

இது ஒரு அஜெண்டாவாகவே இருந்தாலும் அதை உடனடியாக மறுத்து அறிக்கைவிடுப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், விஜயோ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமோ இப்படியான செய்திகளை அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. இதுதான் பொதுமக்களை தாண்டி, அவரது கட்சி தொண்டர்களிடமே சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

வந்தந்திகளுக்கு பதில் சொல்லாத ஆதவ் அர்ஜூனா

அந்த கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோதுகூட ’வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று கூறி நகர்ந்தாரே தவிர, உறுதியாக அந்த செய்தி பொய் என்றும், கொள்கை எதிரியாக அறிவித்த பாஜகவோடு கூட்டணி எப்படி வைக்க முடியும்? என்ற ரீதியிலோ எதுவும் அவர் பேசவில்லை. சோஷியல் மீடியாக்களில் வரும் கமெண்டுகளுக்கெல்லாம் கால்க்கடுக்க நின்று பதில் சொல்லும் ஆதவ் அர்ஜூனா, கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பேசப்பட்டு வரும் செய்திகளை வதந்தி என்று சொல்லிவிட்டு கடந்துப்போனதும்  அரசியல் விமர்சகர்கள் இடையே சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

சம்மன் அனுப்பிய சிபிஐ – சமரசம் செய்துகொள்ளும் விஜய்?

இப்படியான நிலையில், நாளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பவர்களுக்கான நேர்காணலை அந்த கட்சி நடத்தவிருந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக நாளை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கிறது சிபிஐ. கரூர் வழக்கை வைத்து விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாகவும் பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் இந்த கூட்டணி விவகாரத்தில் வெளிப்படையாக எப்போது பதில் கூறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

”அதிமுக கூட்டணிதான் ஆனால் பாஜக தலைமை இல்லை”

ஒருவேளை கசிந்துவரும் செய்திகளை உண்மைக்குவது போன்று, திடீரென பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டு, இது தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல் அதனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறோம். ஆனால், பாஜக தலைமையை ஏற்கமாட்டோம் என விஜய். சப்பைக் கட்டு கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அரசியலில் எதுவும் நடக்கும். எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது !

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
லட்சுமணன் போடும் ‘மனப்பால்’ கணக்கு: கடுப்பில் உடன்பிறப்புகள்... விழுப்புரத்தில் சிதறும் வாக்கு வங்கி!
"திருவாரூரில் 3வது முறையாக பூண்டி கலைவாணன் எம்எல்ஏ ஆக வேண்டும்.." நிர்வாகிகளுக்கு அமைச்சர் கேஎன் நேரு உத்தரவு
Puducherry Election 2026 : இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை: ராகுல் காந்தி அதிரடி வாக்குறுதி!
Puducherry Election 2026 : இளைஞர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை: ராகுல் காந்தி அதிரடி வாக்குறுதி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget