மேலும் அறிய
ரயில் பயணக் கட்டண உயர்வு: நாளை முதல் அமல்... உங்கள் பயணத்தை பாதிக்குமா? முக்கிய அறிவிப்பு!
டிசம்பர் 26 மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் பயண சீட்டுகளுக்கு கட்டணம் உயர்வு பொருந்தும். ரயில் நிலையங்களில் கட்டண உயர்வு பற்றிய அறிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில்
நாளை முதல் ரயில் பயண கட்டணம் உயர்வு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
ரயில் பயணக்கட்டணம் உயர்வு
ரயில் பயணக்கட்டணம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) முதல் சிறிய அளவில் உயர்த்தப்பட இருக்கிறது. சாதாரண ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 215 கிலோ மீட்டர் வரை எந்த கட்டண உயர்வும் கிடையாது. அதற்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் மற்றும் புறநகர் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி மற்றும் குளிர் சாதன வசதி இல்லாத பெட்டிகளில் பயணிக்க கிலோமீட்டருக்கு இரண்டு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26 மற்றும் அதற்கு பின்பு பயணிக்க ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கு கட்டண உயர்வு வசூலிக்கப்பட மாட்டாது. டிசம்பர் 26 மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் பயண சீட்டுகளுக்கு கட்டணம் உயர்வு பொருந்தும். ரயில் நிலையங்களில் கட்டண உயர்வு பற்றிய அறிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement





















