மேலும் அறிய

Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்

Trump Modi: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆமாம் சாமி போடும் நபராக பிரதமர் மோடி மாறிவிட்டதாக, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • அணி சேரா கொள்கையை மறந்த மோடி பதவி விலக வேண்டும்: கெஜ்ரிவால்.
  • மத்திய கிழக்கு பதற்றம்: இந்தியாவில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
  • அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவு: எரிபொருள் பற்றாக்குறைக்கு மோடி காரணமென்றார்.
  • வணிகர்கள் பாதிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலை தெரிவிக்கின்றனர்.

Trump Modi: இந்தியாவின் அணி சேரா கொள்கையை மறந்த பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என, அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

மோடி மீது கெஜ்ரிவால் அட்டாக்

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக, இந்தியாவில் வணிக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். தலைநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடி இந்தியாவின் நீண்ட கால கொள்கையான அணி சேராமையை மறந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பு எடுத்ததன் விளைவாகவே, நாடு தற்போது எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக” சாடினார்.

”இந்தியாவின் கொள்கையை மறந்த மோடி”

தொடர்ந்து பேசுகையில், “வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிபொருள் பற்றாக்க்குறை காரணமாக நாடு தீவிரமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 சதவிகித எல்பிஜி வாயுவானது இறக்குமதியே செய்யப்படுகிறது. அதில் 90 சதவிகிதம் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு வரப்படுகிறது. தற்போது நமது இறக்குமதி கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றார். போர் தொடங்குவதற்கு முன்பாக இஸ்ரேலுக்கு சென்று நேதன்யாகு உடன் நட்பு பாராட்ட வேண்டிய அவசியம் என்ன? 

”ட்ரம்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி”

சொல்வதற்கு எனக்கே அவமானமாக உள்ளது. ஆனால், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடிமையாகிவிட்டார். 140 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டை அமெரிக்காவின் காலனித்துவத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். பிரதமர் மோடி பலவீனமானவராக இருக்கிறார், மிரட்டப்படுகிறார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் என ட்ரம்ப் சொல்கிரார், அதற்கு மோடி சரி என்கிறார். அமெரிக்க பொருட்களுக்கு வரியே இல்லை, ஆனால் இந்திய பொருட்களுக்கு 18 சதவிகிதம் வரி என ட்ரம்ப் சொன்னால் அதற்கும் மோடி சரி என்கிறார். ட்ரம்புக்கு ஆமாம் சாமி போடும் நபராக மாறிய பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும். ” என அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை - வணிகர்கள் கவலை

பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இஸ்ரேல் சென்று, நேதன்யாகுவை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அடுத்த சில தினங்களிலேயே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்துள்ள ராணுவ தாக்குதலால், குவைத் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களில் ஓட்டல்கள் இயங்க முடியாத நிலையை எட்டியுள்ளன. எல்பிஜி கேஸை மட்டுமே நம்பியிருக்கும் சிறிய உணவகங்கள் உடனடியாக பாதிக்கப்பட்டு விடுமுறையை அறிவித்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் அடுப்பில் சமைக்க முற்பட்டாலும், தேவை அதிகரிப்பு காரணமாக விறகு விலை மளமளவென உயர்ந்துள்ளது.

Frequently Asked Questions

பிரதமர் மோடி மீது அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் விமர்சனம் வைத்தார்?

மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்திய அணி சேரா கொள்கையை மறந்து அமெரிக்கா, இஸ்ரேல் சார்பு எடுத்ததே இதற்குக் காரணம் என கெஜ்ரிவால் கூறுகிறார்.

இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

இந்தியாவின் 60% எல்பிஜி இறக்குமதி செய்யப்படுகிறது, அதில் 90% ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. மேற்காசிய பதற்றத்தால் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் மோடியை எதற்கு அடிமை என்று கூறுகிறார்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வதை மோடி கேட்பதாகவும், இந்தியாவை அமெரிக்க காலனித்துவத்திற்கு கொண்டு செல்வதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டுகிறார்.

வணிகர்கள் எரிபொருள் பற்றாக்குறையால் என்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர்?

வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் உணவகங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, சிறிய உணவகங்கள் விடுமுறை அறிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget