மேலும் அறிய

முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ

Farooq Abdullah: ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மீது, திருமண வீட்டில் நடந்த கொலை முயற்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ஜம்முவில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு.
  • திருமண விழாவில் பாதுகாப்பு வீரர் எச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு.
  • துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரிக்கு லேசான காயம், அப்துல்லா தப்பினார்.
  • சந்தேக நபர் கமல் சிங் ஜம்வால் கைது, விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Farooq Abdullah: ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி:

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்,  தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனருமான டாக்டர் பரூக் அப்துல்லா, புதன்கிழமை மாலை ஜம்முவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் நகரின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற ஒரு வழக்கறிஞரின் மகனின் திருமண விழாவில் அப்துல்லா பங்கேற்று இருந்தார். அப்போது விழாவிற்குப் பிறகு விருந்து மண்டபத்திலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் சந்தேக நபரை நொடி நேரத்தில் மடக்கிப் பிடித்ததன் மூலம் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு - வீடியோ வைரல்..

மத்திய அரசின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள அப்துல்லாவுடன் ஜம்மு-காஷ்மீர் துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சம்பவத்தின் போது, ​​பெல்லட் குண்டு தாக்கியதில் சவுத்ரிக்கு லேசான காயம் ஏற்பட்டது, உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து அப்துல்லாவே எந்த காயமும் இல்லாமல் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோவின்படி, தனது சகாக்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் சூழ அப்துல்லா நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவராக வந்த நபர், மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து, அப்துல்லாவின் தலைக்கு அருகே கொண்டு சென்று சுட முயன்றுள்ளார். நொடி நேரத்தில் அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர் இதனை உணர்ந்து, மர்ம நபரை தடுத்து நிறுத்தி கீழே தள்ளி சுற்றி வளைத்தனர். அப்போது துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா கூரையை நோக்கி சென்றது. அப்துல்லா அங்கிருந்து தலையை குனிந்தபடி தப்பிச் சென்றார். 

காவல்துறை விசாரணை:

கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் அருகிலுள்ள புதர்களில் மறைந்திருந்ததாகவும், அப்துல்லா விருந்து மண்டபத்தை விட்டு வெளியேறும்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடப்பதற்கு முன்பு அப்துல்லா திருமண விழாவில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்,  தாக்குதலைச் சுற்றியுள்ள அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்து வருகின்றனர். நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டதால், பாதுகாப்பு நிறுவனங்களும் சம்பவத்தை மறுபரிசீலனை செய்து வருகின்றன. மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவில் இருந்தும், ஆயுதமேந்திய ஒருவர் எப்படி எனது தந்தையை இவ்வளவு நெருக்கமாக அணுக முடிந்தது? என ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Frequently Asked Questions

ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சம்பவம் எங்கு நடைபெற்றது?

ஜம்மு & காஷ்மீரின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கறிஞரின் மகனின் திருமண விழாவில் இந்த சம்பவம் அரங்கேறியது.

துப்பாக்கிச் சூட்டில் ஃபரூக் அப்துல்லா காயமடைந்தாரா?

இல்லை, ஃபரூக் அப்துல்லா எந்த காயமும் இன்றி நூலிழையில் தப்பித்தார். இருப்பினும், துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார், அவர் கைது செய்யப்பட்டாரா?

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் கமல் சிங் ஜம்வால். அவர் கைது செய்யப்பட்டு, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதா?

துப்பாக்கிச் சூட்டில் துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget