மேலும் அறிய
Madurai ; உசிலம்பட்டியில் வாஜ்பாயின் பிறந்தநாள்: 500 நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கிய பாஜக நிர்வாகிகள் !
பாஜக நிர்வாகிகள் இன்று 49வது ஆண்டாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கியதாக தெரிவித்தனர்.

ஆப்பிள் வழங்கிய பாஜகவினர்
Source : whatsapp
உசிலம்பட்டியில் 49- ஆவது ஆண்டாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கி பாஜக நிர்வாகிகள் கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 101வது பிறந்த நாள்
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 101வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி இன்று நாடு முழுவதும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முதல்வர் புகழாரம்
மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் வாஜ்பாயின் பிறந்தநாளுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும் நமது தலைவர் கலைஞருடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவு கூர்வோம். வலது சாரி கருத்தியல் கொண்டவராக இருந்தாலும் பிரதமர் பொறுப்பில் இருந்த போது நாட்டின் மதச் சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்
அணு ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனையை உலகறிய செய்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய்-ன் 101வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் போஸ் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் இன்று 49வது ஆண்டாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆப்பிள் வழங்கியதாக தெரிவித்தனர். சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெறுவதுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டிக் கொள்ள கேட்டுக் கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















