மேலும் அறிய

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !

போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் – நான்கு நாட்களாக நடைபெறும் போராட்டம்: வழக்கறிஞர் குழுவுடன் பேச்சுவார்த்தை தோல்வி.

சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
 
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த 5 - ஆம் தேதி முன்தினம் இருவரக இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி காலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசார் கைது செய்த ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரலாம் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் குழுவினர் மானாமதுரைக்கு வந்தனர். இந்த வழக்கறிஞர் குழுவில் சாமிதுரை, மயில்வாகனம் ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
 
போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
ஆனால் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து போராட்டக் குழுவினர், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மானாமதுரையில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முக்கிய குறிப்பு

மானாமதுரை ஆகாஷ் மரண விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் “காவல்துறையினர்  காலை உடைத்தனர். கீழே விழுந்ததாக கூறுமாறு மிரட்டியதால் அவ்வாறு சொன்னேன்” - என ஆகாஷின் வாக்குமூலம் தெரிவித்தது தெரியவந்தது. ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது SC STபிரிவின் கீழ் வழக்கு மாற்றம் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது. பிரதமர், முதல்வர் வருகைக்காக போக்குவரத்து பாதை மாற்றப்படுகையில், பொதுமக்களுக்காக செய்யலாமே?- நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் குழுவை அமைத்து, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரவும் மதுரை அமர்வு உத்தரவிட்டது. போராட்டக்காரர்கள் மறுத்தால் நீதிமன்றமே அகற்ற உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
Embed widget