மேலும் அறிய

Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்

Data Tax: மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இணைய சேவைக்கான டேட்டாவிற்கு வரி விதிப்பது குறித்து ஆய்வறிக்கையை சமர்பிக்க, தொலைதொடர்பு துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாம்.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்கிறது.
  • குழந்தைகள் டேட்டா பயன்பாட்டை குறைப்பது குறித்து ஆய்வறிக்கை செப்டம்பரில் சமர்ப்பிக்கப்படும்.
  • ஒரு ஜிபி டேட்டாவிற்கு ஒரு ரூபாய் வரி விதித்தால் ₹22,900 கோடி வருவாய் கிடைக்கும்.
  • டேட்டா வரி விதிப்பு புதுமைகளை பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Data Tax: மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இணைய சேவைக்கான டேட்டாவிற்கு வரி விதிப்பது குறித்து ஆய்வறிக்கை செப்டம்பர் மாதம் சமர்பிக்கப்பட வாய்ப்புள்ளதாம்.

டேட்டா பயன்பாட்டிற்கு வரி திட்டம்:

அதிகரித்து வரும் இணைய பயன்பாடு சிக்கல் மற்றும் தொலைதொடர்பு துறையின் வருவாயை அதிகரிக்கும் விதமாக, மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு என பிரத்யேகமான வரியை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம். கடந்த ஜனவரி 7ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தொலைதொடர்புத்துறையின் ஆய்வுக் கூட்டத்தில், புதிய வரி விதிப்பு திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பாக தனி மனிதர்களின் தினசரி இணைய பயன்பாடு என்பது இந்தியாவில் மிகவும் சொற்பமாகவே இருந்தது. ஆனால், தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி, நாளொன்றிற்கு சுமார் 0.9 தொடங்கி 1.2 ஜிபி வரையிலான மொபைல் டேட்டா தனிமனிதனால் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், மொபைல் டேட்டாவிற்கும் வரி விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு ஆராய தொடங்கியுள்ளது.

ஆய்வறிக்கையை சமர்பிக்க உத்தரவு

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தின் போது, வருவாய் ஈட்டக்கூடிய கட்டமைப்பை ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்வதோடு, ஆக்கபூர்வமான டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவித்து, அதிகப்படியான டேட்டா நுகர்வை குறிப்பாக குழந்தைகளிடையே டேட்டா பயன்பாட்டை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஒரு திட்டத்தை சமர்ப்பிக்குமாறு தொலைதொடர்பு துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

ஒரு ஜிபி-க்கு ஒரு ரூபாய் வரியா?

2025 நிதியாண்டில் இந்தியாவின் மொபைல் டேட்டா நுகர்வு சுமார் 229 பில்லியன் ஜிபியாக இருந்தது. அதன்படி, ஒரு ஜிபிக்கு ஒரு ரூபாய் வரி விதித்தாலே அரசாங்கத்திற்கு சுமார்  22 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஏற்கனவே ​​தொலைத்தொடர்பு பயனர்கள் மொபைல் ரீசார்ஜ்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி செலுத்துவது குறிப்பிடத்தக்கது. 2026 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில், குழந்தைகளிடையே டிஜிட்டல் போதை அதிகரித்து வருவதை மத்திய அரசு கோடிட்டு காட்டி இருந்தது. ஸ்பெக்ட்ரம் ஏலம் மற்றும் ஆபரேட்டர்களிடமிருந்து உரிமக் கட்டணங்களை தாண்டி, தொலைத்தொடர்பு துறையின் வருவாயை விரிவுபடுத்த அரசு முயற்சிப்பதால், முன்மொழியப்பட்ட நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட அதிகப்படியான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தேவையில்லாத ஆணி - எச்சரிக்கும் வல்லுநர்கள்

டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது செயல்படுத்த கடினமாக இருக்கும் என்றும், மலிவு விலையில் தரவு நுகர்வில் உலகத் தலைவராக இந்தியாவின் நிலையைப் பாதிக்கும் அதே வேளையில், புதுமைகளுக்கு சிக்கலாக மாறக்கூடும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பெரும்பாலான நாடுகள் தங்கள் வணிகத்தின் மையமாக டேட்டாவை கொண்ட நிறுவனங்களின் வருமானத்திற்கு வரி விதிக்கின்றன. இதுபோக சில கேமிங் சேவைகளின் நேரம் அல்லது நுகர்வோரின் வயதில் கட்டுப்பாடுகளுடன் திரை பயன்பாட்டை வேறு வழிகளில் குறைக்க முயற்சிக்கின்றன. அதையெல்லாம் விடுத்து டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதித்து, குழந்தைகள் நலனை காப்போம் என கூறுவது ஏற்கமுடியாதது என்றும் வலியுறுத்துகின்றனர்.

Frequently Asked Questions

மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா?

ஆம், மத்திய அரசு மொபைல் டேட்டா பயன்பாட்டிற்கு ஒரு புதிய வரியை விதிக்க பரிசீலித்து வருகிறது. தொலைத்தொடர்பு துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் விவாதிக்கப்பட்டுள்ளது.

டேட்டா வரி தொடர்பான ஆய்வறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும்?

டேட்டா பயன்பாட்டிற்கான வரி திட்டம் குறித்த ஆய்வறிக்கையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு ஜிபி டேட்டாவிற்கு ஒரு ரூபாய் வரி விதித்தால் எவ்வளவு வருவாய் கிடைக்கும்?

2025 நிதியாண்டில் இந்தியாவின் மொபைல் டேட்டா நுகர்வின் அடிப்படையில், ஒரு ஜிபிக்கு ஒரு ரூபாய் வரி விதித்தால் அரசாங்கத்திற்கு சுமார் 22,900 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது குறித்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள்?

வல்லுநர்கள் டேட்டா பயன்பாட்டிற்கு வரி விதிப்பது செயல்படுத்த கடினம் என்றும், இது இந்தியாவின் மலிவு விலை டேட்டா நிலையை பாதிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget