மேலும் அறிய
Advertisement
Traffic change ; மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம், எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
”போக்குவரத்து மாற்றங்களினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் இருப்பின் தக்க பரிசீலனை செய்து மாற்றங்கள் செய்யப்படும்” - எனவும் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நாள்தோறும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாட்டுத்தவணி சாலையில் தனியார் வணிக நிறுவனம் மற்றும் முக்கிய தனியார் மருத்துவமனையால் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது. அதே போல் நெல் பேட்டை பகுதியில் வெங்காய மார்கெட் செயல்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. அதே போல் கோரிப்பாளையம், ஆவின் பால்பண்ணை, சிக்னல் என பல இடத்தில் கடுமையான போக்குவரத்து நிலவுகிறது. இந்நிலையில் கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து சிரமத்தை குறைக்க புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த சூழலில் மேம்பால பணிகளுக்காக இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறதாக மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேம்பால பணி
மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி நகருக்குள் சென்றுவர 01.07.2024 முதல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளன. பெரியார் பேருந்துநிலையம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம்.எம் லாட்ஜ். இ2, இ2 சாலை, அரசன் பேக்கரி, நவநீதகிருஷ்னன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு, IOC ரவுண்டானா வழியாக வந்து நத்தம் சாலை, அழகர்கோயில் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்ல வேண்டும். நத்தம் சாலை, அழகர்கோவில் சாலையிலிருந்து வரும் அரசு மாநகர பேருந்துகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அவுட் போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு வந்து, அங்கு வலதுபுறம் (Wrong Right) திரும்பி North Gate, தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக AV பாலம் செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் தமுக்கம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காந்தி மியூசியம் வழியாக வள்ளுவர் சிலையை அடையலாம். M.G.R பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் 80 அடிச்சாலை, ஆவின் சந்திப்பு, ஆசாரிதோப்பு சந்திப்பு, வைகை வடகரை ரோடு, செல்லூர் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.
சிரமங்கள் இருந்தால் மாற்றம்
நத்தம் மற்றும் அழகர் ரோடு வழியாக ஆரப்பாளையம் மற்றும் பெரியார் செல்லும் கனரக மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள் அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் 80 அடி சாலை, ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு, கோரிப்பாளையம் சந்திப்பு, AV பாலம் வழியாக வந்து கீழவெளிவீதி மற்றும் யானைக்கல், வடக்குமாரட் வீதி செல்ல வேண்டும். கடந்த 22.06.2024ம் தேதி மேற்கொண்ட சோதனை போக்குவரத்து மாற்றங்களின் அடிப்படையிலும், பொதுமக்கள் நலன் கருதியும் 01.07.2024 முதல் இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளன. இந்த போக்குவரத்து மாற்றங்களினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் இருப்பின் தக்க பரிசீலனை செய்து மாற்றங்கள் செய்யப்படும் என்பதை மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையின் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என சுற்றறிக்கை மூலம் தகவல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion