தேனி அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளி சொக்கருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நீதிபதி அனுராதா தீர்ப்பளித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருஷநாடு பகுதியில் பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபதாரம் விதித்து தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சமுத்திரம் (48). இவரது கணவர் இறந்து விட்டதால் சமுத்திரம் அவரது தாய் வீட்டில் வந்து தங்கி இருந்த நிலையில், அவரது தாயும் இறந்து விட்டதை தொடர்ந்து, அவர் நடத்தி வந்த பெட்டிக்கடையை சமுத்திரம் நடத்தி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கர் (38) என்ற நபர் அடிக்கடி பெட்டி கடைக்கு சென்று சமுத்திரத்திடம், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த நிலையில் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு; விசாரணையை ரத்துசெய்ய மறுப்பு- உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சொக்கர் பெட்டிக்கடையில் தனியாக இருந்த சமுத்திரத்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சொக்கர், சமுத்திரத்தை சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் பெட்டிக்கடை முன்பு காயத்துடன் இருந்த சமுத்திரத்தை ஆட்டோவில் ஏற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு இவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
Breaking News LIVE: எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
இதுகுறித்து வருசநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கர் என்பவர் குற்றவாளி என காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளி சொக்கருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து தேனி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நீதிபதி அனுராதா தீர்ப்பளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் சிறையில் அடைக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

