Breaking News LIVE: பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
இன்றைய தினத்தில், உலகம், இந்தியா, தமிழ்நாடு, விளையாட்டு மற்றும் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, உடனுக்குடன் இங்கு காணலாம். இன்று இந்தியாவின் காலை நேர ப்படி அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.நோக்கியா, பே பால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயம் நாளை நடைபெறவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான செய்திகளின் அப்டேட்டுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்
மலையாள சினிமாவில் திரைப்பட நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது நாளுக்கு நாள் பரபரப்பை கிளப்பி வருகிறது. இது தொடர்பான சமீபத்திய செய்திகளையும் இந்த பக்கத்தில் காணலாம்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான அப்டேட்களையும் பார்க்கலாம்.
மேலும் , உலகம் , இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Coolie - Lokesh Kanagaraj - Rajinikanth : பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் இணைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்! இப்படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!
பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்!
பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்!
எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு செப்.27-க்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்டதையடுத்து செப்டம்பர்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை மகிளா நீதிமன்றம்.
Breaking News LIVE: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும் - வானிலை மையம்
காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவி வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.