மேலும் அறிய

NIT Student Letter : ”ஒரு WIFI-காக நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டுமா?” திருச்சி NIT மாணவி எழுதிய பகீர் கடிதம் இது..!

”பெண்களின் மிகப்பெரிய எதிரியே பெண்கள் தான் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் என்ன செய்வார்கள் இவர்கள்”

அனைவருக்கும் வணக்கம், உங்களில் பலருக்கு அங்கே என்ன நடந்தது என்று தெரியாது, அதனால் நடந்த சம்பவத்தை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.

மாணவி எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்

இன்று எனக்கு நடந்த சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய செய்து விட்டது. நான் மனதளவில் உடைந்துபோய்விட்டேன். என்னுடைய சகோதரரின் உதவியுடன் இதை எழுதுகிறேன். தயவுசெய்து, இந்த செய்தியை பகிரும் நீங்கள், என்னுடைய பெயரைக் பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கு என்னுடைய பிரைவசி அவசியம்.

நான் என்னுடைய அறையில் அமர்ந்து என் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் வைஃபை வேலை செய்வதற்காக என்னுடைய அறைக்கு வந்தான். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், அவன் சுய இன்பம் செய்யத் தொடங்கினான். மேலும் அவன் தனது அந்தரங்க உறுப்பை என் கவனத்தை ஈர்க்கும் வகையில் சைகை செய்து காட்டி, நான் பார்க்கிறேனா? என்பதை உறுதி செய்துக்கொண்டு, ஒரு அருவருப்பான சிரிப்பை சிரித்தான்.

பொறுக்க முடியவில்லை

ஒரு கட்டத்தில், நான் அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த அவன், என்னைப் வலுக்கட்டாயமாக பார்க்கும்படி கட்டாயப்படுத்தினான். நான் மிகவும் பதற்றமடைந்து மிகவும் பயமாகவும் உணர்ந்தேன். அதனால் உடனே நான் அந்த அறையை விட்டு வெளியேறினேன். நான் திரும்பி அறைக்கு வந்தபோது, ​​​​அவர் போய்விட்டார். ஆனால் தரை முழுவதும் அவருடைய விந்தணுக்கள் இருந்தது. அதன் புகைப்படத்தை காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நான் என் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள பணிப்பெண்ணிடம் புகாரளிக்கச் சென்றேன். சிரித்துக்கொண்டே இதனை கேட்ட அவர், தற்போது தான் நான் வந்தேன். வந்தவுடனேயே நீங்கள் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் என்று சொன்னார்.

நான் மனதளவில் சோர்ந்தேன். சரி வார்டன் வந்து உதவுவார்கள் என்று நம்பினேன். ஆனால் அதற்கு மாறாக, அவர்கள் அனைவரும் எனக்கு எதிராகத் திரும்பினர்.

அலட்சியமாக இருந்த வார்டன்

உங்களால் தான் தற்போது வைஃபை கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு நீங்கள் தான் காரணம். நாங்கள் உங்களுக்காக மிகவும் கடினமாக உழைக்கிறோம். ஆனால் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட நன்றி இல்லை என்றனர். எனக்கு புரியவில்லை ஒரு வைஃபை கனெக்‌ஷன் கொடுப்பதற்கு நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட வேண்டுமா? என்று எனக்கு தோன்றியது.

நான் பேண்ட் போடாதது குற்றமா?

மேலும் அந்த நபரை அவர்கள் அனைவரும் "சார்" சார் என்று மரியாதையுடன் குறிப்பிட்டார்கள். மேலும் காவல்நிலையத்தில் பேசிக்கொண்டிருந்த போது "அவள் பேன்ட் கூட அணியவில்லை" போன்ற வசனங்களை பயன்படுத்தி, எல்லாப் பழிகளையும் என் மீது சுமத்த முயன்றனர். நான் முழுப் பாவாடை அணிந்திருந்ததை குறிப்பிட விரும்புகிறேன்.

டீன் மட்டுமே உதவினார்

கல்லூரி டீன் வந்த பிறகுதான், அவனை சார் என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள், அவன் ஒரு நாய், கட்டி வைக்க பட வேண்டியவன் என்றார். மற்ற அனைவரும் உடனே நடந்த அனைத்தையும் மூடி மறைக்க பார்த்தனர்.

மொத்த தவறும் நான்தான் செய்தேன் என்று பழியை என் மீது சுமத்தும் வகையில் பேசி, அவர்கள் எங்களை தூண்டி விடுவதற்கான அனைத்தையும் செய்து விட்டார்கள். அவர்களால் பட்ட அனைத்தும் போதும் என்று நான் அழுது கொண்டே இருந்தேன். மேலும் எனது நண்பர்களின் அறையில் எலக்ட்ரிக்கல்/பிளம்பிங் போன்ற புகார்கள் எதையும் நாங்கள் இனி சரி செய்ய மாட்டோம் என்று மிரட்டினார்கள்.

காவல்நிலையத்தில் நடந்தவை

இது அனைத்துமே காவல் நிலையத்தில் நடந்தது. விடுதிக்குள் நாங்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் ஊரடங்கு உத்தரவால் என்ன பயன் என்று என் நண்பர் கேட்டார் - அது தங்கள் பாதுக்காப்புக்கு என்று வார்டன் பதிலளித்தார். எவ்வளவு தைரியம் இருந்தால் இன்றைய சம்பவத்திற்கு பிறகு அவர் அப்படி பேசுவார்?

மேலும் வார்டன் கூறும்போது நீங்கள் நடனம் மற்றும் இசைக்கு பதிலாக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் வருவதற்கு முன்பே நீங்கள் அவரை அடித்திருக்கலாம் என்று கூறினார்.

அடித்தால் என்ன சொல்லியிருப்பார்கள் ?

நான் உண்மையில் அவரை அடித்திருந்தால் அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது? (அவனை அடிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்டு இருப்பார்கள்.)

என் பெற்றோரும் இதே கேள்வியை கேட்டபோது, ​​இது அவர்களின் கடமை அல்ல என்று பதிலளித்தனர். இதற்குப் பிறகு நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவளிப்பீர்களா என்று கூட எனக்குத் தெரியவில்லை.

பெண்களின் பெரிய எதிரியே பெண்கள்தான்

பெண்களின் மிகப்பெரிய எதிரியே பெண்கள் தான் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் என்ன செய்வார்கள் இவர்கள்?

உங்கள் குறிப்புக்காக, அருவருப்பான செயலில் ஈடுப்பட்ட அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். ஆனால் இந்த நிகழ்வு கையாளப்பட்ட விதம், நிறுவனத்திடமிருந்து எங்களுக்கு சிறிய உதவி கூட கிடைக்காததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்." என அந்த மாணவி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget