பலத்த காற்றில் இருந்து வாழை மரங்களை பாதுகாப்பது எப்படி..?
பாதிப்பை தடுக்க தார் போட்ட வாழை மற்றும் நன்கு உயரமாக வளர்ந்த வாழை மரங்கள் சாயாமல் இருக்கும் வகையில் சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி மரங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் வாழை, திராட்சை, மா, கொய்யா போன்ற பழப்பயிர்கள் 18 ஆயிரத்து 750 ஹெக்டேர் அளவிலும், தக்காளி, மிளகாய், வெண்டை. வெங்காயம், கத்தரி போன்ற காய்கறி பயிர்கள் 5 ஆயிரத்து 700 ஹெக்டேர் அளவிலும் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
Coimbatore Car Blast: கோவை கார் வெடிப்பு - 6வது நபரை இரவோடு இரவாக தட்டித் தூக்கிய காவல்துறை..!
வாழை பயிர்களை பொறுத்தவரை, பலத்த காற்றுக்கு எளிதில் முறிந்து விடும். இதில் தார் போட்ட வாழைகள் அதிக பாதிப்பை சந்திக்கும். இந்த பாதிப்பை தடுக்க தார் போட்ட வாழை மற்றும் நன்கு உயரமாக வளர்ந்த வாழை மரங்கள் சாயாமல் இருக்கும் வகையில் சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி மரங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
crime: காதல் விவகாரத்தில் மகள் மீது சந்தேகம்... தந்தை செய்த கொடூர செயல்... தெலங்கானாவில் அதிர்ச்சி
திராட்சைக் கொடியில் போர்டோ கலவை பசையினை பூச வேண்டும். கவாத்து செய்தல் வேண்டும். திராட்சைக் கொடிகளை பந்தல் அமைப்பில் நன்கு கட்ட வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை பயிர்களை பொறுத்தவரை காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். நோய்த் தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
Cylinder Blast Case : கோவை காரில் சிலிண்டர் வெடித்த வழக்கு ; ஜமேசா முபினின் உறவினர் கைது
இதர தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை, அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
பசுமைக்குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அவற்றின் அடிப்பாகத்தை கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அவற்றின் அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்