crime: காதல் விவகாரத்தில் மகள் மீது சந்தேகம்... தந்தை செய்த கொடூர செயல்... தெலங்கானாவில் அதிர்ச்சி
crime: காதல் விவகாரத்தில் மகளை கோடாரியால் வெட்டி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
crime: காதல் விவகாரத்தில் மகளை கோடாரியால் வெட்டி தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார்.15 வயதான கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கம். அப்போது ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு நாள் கீதா இளைஞர்களிடம் பேசுவதை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்ட தந்தை ராஜசேகர், கீதாவுக்கு அறிவுரை கூறினார். இச்சம்பவம் தொடர்பாக தந்தை ராஜசேகருக்கும்,மகள் கீதாவுக்கும் இடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். காதல் விவகாரத்தால் குடும்பம் அவமானம் அடையும் என்று அவரது தந்தை அறிவுரை கூறியதாக தெரிகிறது. மேலும் அந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தந்தை ராஜசேகர், காதல் விவகாரம் இருப்பதாக சந்தேகித்துள்ளார். சந்தேகமடைந்த தந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மகளை கோடாரியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தந்தை ராஜசேகரை கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தார். மேலும் அவர் மீது ஐபிசி பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் தொடர் கதையாகி வருகிறது. இந்தியாவில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உட்பட பல நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நவீன காலத்தில் கூட சாதி, மதம் என்று பிரித்து பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக குடும்பத்தில் இருப்பவர்களே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கொடுமையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
Crime: 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...தொடர்ந்து பதைபதைக்க வைக்கும் கொடூரம்...