மேலும் அறிய
Advertisement
எங்கே எங்கள் எய்ம்ஸ் ? - மதுரையில் நடைபெறும் போராட்டம் குறித்து சு.வெங்கடேசன் பேட்டி
"மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள்" - சு.வெங்கடேசன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமானதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் நாளை நடைபெறவுள்ள மாபெரும் போராட்டம் குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் இன்று மகபூப்பாளையத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
#எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை துவங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. இருந்தும் மக்களுக்கான அநீதியை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
— arunchinna (@arunreporter92) January 23, 2023
- மதுரை எம்.பி @SuVe4Madurai பேட்டி !@SRajaJourno | #aims #madurai @VirudhunagarMP | @ThanniSnake pic.twitter.com/z5qsj4oNrT
செய்தியாளர்களிடம் மதுரை எம்.பி பேசுகையில்,"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2018 டிசம்பரில் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து அறிவிக்கப்பட்ட தொகை ரூபாய்.1264 கோடி. பின்னர் 150 படுக்கை கொண்ட புதிய பிரிவை உருவாக்குவதற்காக மறுமதிப்பீடு செய்து ரூ.1977 கோடியாக நிதி உயர்த்தப்பட்டது. அப்படியெனில், ஒரு படுக்கைக்கு 4.74 கோடி ரூபாயா? இதில் 1627 கோடி ரூபாயை ஜெய்கா நிறுவனம் கடனாக வழங்கும் நிலையில், வெறும் 350 கோடியை ஒதுக்குவதில் என்ன சிக்கல்? ஒன்றிய அரசின் அலட்சிய போக்கும், நிர்வாக குழப்பமும் தான் இதற்கு காரணம். தமிழகத்திற்கான திட்டங்களை பாரபட்சத்துடன் பார்ப்பதும், மக்களை வஞ்சிக்கும் அரசியலின் ஒரு பகுதியாகவுமே இதை பார்க்க வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை துவங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. இருந்தும் மக்களுக்கான அநீதியை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது 2.5 கோடி மதிப்பில் நிர்வாக கட்டிடம் கட்டப்படும் என அறிவித்திருப்பதும் கண்துடைப்பு தான். ஒன்றிய அரசின் நிர்வாக குழப்பங்களால் தான் ஜெய்கா நிறுவனம் வழங்க வேண்டிய கடன் தொகையை கூட இதுவரை வழங்காமல் உள்ளது. ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2026ல் பட்டம் பெற்று வெளியேறும் போது கூட அவர்கள் பயின்ற கல்லூரியை அவர்களால் பார்க்க முடியாது. தாம் பயின்ற கல்லூரியையே காணாமல் பட்டம் பெற்று வெளியேறுபவர்கள் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் மட்டும் தான்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்யவில்லை பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தொகையை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 10,000 பேர் பங்கேற்கும் மாபெரும் முழக்க போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில், 3 எம்பிக்கள் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்பில் நடைபெறவுள்ளது" என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Palani Kumbabishekam: பழனி கோயில் கும்பாபிஷேகம் - தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion