மேலும் அறிய
Advertisement
Southern Railway: ரயில் பயணிகள் கவனத்திற்கு... இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நவம்பர் 27 முதல் ஜனவரி 30 வரை தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் மும்முறை சேவை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
சிலம்பு எக்ஸ்பிரஸ் - கூடுதலாக ஆறு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது
பண்டிகை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை சேவை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20681/20682) கூடுதலாக ஆறு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி இந்த ரயில்களில் நவம்பர் 27 முதல் ஜனவரி 30 வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட உள்ளது.
கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும்
தற்போது இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என 17 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. மேலும் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதால் மொத்தம் 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது. இதே போல நவம்பர் 27 முதல் ஜனவரி 30 வரை தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் மும்முறை சேவை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் (22657/22658) கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion