இறக்கை எலும்பு உடைந்து சாலையில் கிடந்த ஆந்தை... இரக்கம் காட்டிய மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி
இறக்கை எலும்பு உடைந்தநிலையில் சாலையில் கிடந்த ஆந்தையை மீட்டு EPOXY BUTTY சிகிச்சை முறையில் 2 மணி நேர அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள் - வனத்துறையினரிம் ஒப்படைப்பு.
ஆந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது
மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் திருவள்ளூர் காலனி பகுதியில் ஆந்தை ஒன்று இறக்கையில் அடிபட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் காயம்பட்டு கிடந்த ஆந்தையை மீட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் காயம்பட்ட நிலையில் இருந்த ஆந்தையை மருத்துவர்கள் XRAY மூலமாக பரிசோதித்தபோது இறக்கையில் உள்ள எலும்பு உடைந்துள்ளது, தெரிந்தது. இதனையடுத்து அரசு கால்நடை மருத்துவ பிரதம மருத்துவரான சரவணன் தலைமையிலான மெரில்ராஜ், கலைவாணன், முத்துராம் ஆகியோர் அடங்கிய கால்நடை மருத்துவக்குழுவினர் EPOXY BUTTY முறையில் 2 மணி நேரம் போராடி ஆந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஆந்தைக்கு மயக்கமருந்து அளிக்கப்பட்டு K-WIRE பொறுத்தப்பட்டு எலும்பு அறுவைசிகிச்சை நடைபெற்றது.
ஆந்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
இதனையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆந்தை சுயநினைவுக்கு வந்த நிலையில் மருத்துவர்கள் மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மதுரையில் சாலையில் அடிபட்டு கிடந்த ஆந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் ஆந்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!