மேலும் அறிய

மதுரையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமி.. ஆஹா மீண்டும் புதிதாய் கிடைத்த பொக்கிஷம் !

டேபிள் டென்னிஸ் ஆடுகளம் கொண்ட 250 இருக்கைகளுடன் கூடிய உள்விளையாட்டரங்கம் மற்றும் ஆண், பெண் உடைமாற்றும் அறைகள் கொண்ட வசதியுடன் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை ஒலிம்பிக் அகாடமியை திறந்து வைத்தார்.

நவீன விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றார். 
 
தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருகின்றார். மேலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை  வழங்கி வருகின்றார். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெறும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் சர்வதேச தரத்திலான உடற்பயிற்சி கூடங்கள், உள்ளரங்க மைதானங்கள், பார்வையாளர் கூடங்கள், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம், உள்ளரங்க வாலிபால், கூடைப்பந்து,  மைதானங்கள், கபடி குத்துச்சண்டை மைதானங்கள், சர்வதேச தரத்திலான நீச்சல் குளங்கள், ஹாக்கி மைதானங்கள் என நவீன விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றார். 
 
இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்
 
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக விளையாட்டு மைதானங்களை நிறுவி வருகின்றார். இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
 
ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிப்பு
 
 தமிழ்நாடு துணை முதலமைச்சர் மதுரை மாவட்டத்தில் உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கபடி மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தரை தளத்தில் ஒரு கபடி ஆடுகளம், முதல் தளத்தில் 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளம் கொண்ட 250 இருக்கைகளுடன் கூடிய உள்விளையாட்டரங்கம் மற்றும் ஆண், பெண் உடைமாற்றும் அறைகள் கொண்ட வசதியுடன் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
 
விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். 
 
மேலும், ஒலிம்பிக் அகாடமியில் நவீன வசதிகளுடன் கொண்ட புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள திறந்தவெளி கூடைப்பந்து ஆடுகளம் செயற்கை தரையமைப்பு ஆடுகளமாகவும்,  தற்போது உள்ள மூன்று திறந்தவெளி டென்னிஸ் ஆடுகளங்கள் செயற்கை தரையமைப்பு கூடிய புதிய டென்னிஸ் ஆடுகளங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மொத்தம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கபடி ஆடுகளம், 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளங்கள் கொண்ட மதுரை ஒலிம்பிக் அகாடமி, செயற்கை தரையமைப்பு கொண்டதாக மேம்படுத்தப்பட்ட 3 டென்னிஸ் மைதானங்கள், 2 கூடைப்பந்து மைதானங்களை திறந்து வைத்து பார்வையிட்டு, விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Points Table: பஞ்சாப் டாப்... மும்பை ஃப்ளாப்! புள்ளிப்பட்டியலில் யாருக்கு எந்த இடம்?
IPL Points Table: பஞ்சாப் டாப்... மும்பை ஃப்ளாப்! புள்ளிப்பட்டியலில் யாருக்கு எந்த இடம்?
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
MS Dhoni Return: எப்போது களமிறங்குவார் 'தல'? சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம அப்டேட்!
MS Dhoni Return: எப்போது களமிறங்குவார் 'தல'? சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம அப்டேட்!
IPL 2026: ஒரே நாளில் ஆர்சிபி, சென்னைக்கு தோல்வி.. கொண்டாட நினைத்த ரசிகர்களுக்கு திண்டாட்டம்!
IPL 2026: ஒரே நாளில் ஆர்சிபி, சென்னைக்கு தோல்வி.. கொண்டாட நினைத்த ரசிகர்களுக்கு திண்டாட்டம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!
IT Raid Selvaperunthagai house : செல்வப்பெருந்தகை வீட்டை சுற்றிவளைத்த வருமான வரித்துறை.! இது தான் காரணம்.? கொந்தளித்த காங்கிரஸ்
செல்வப்பெருந்தகை வீட்டை சுற்றிவளைத்த வருமான வரித்துறை.! இது தான் காரணம்.? கொந்தளித்த காங்கிரஸ்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
Election Commission restrictions : நாளை மாலை 6 மணிக்கு பிறகு என்ன செய்யலாம்.? என்ன செய்ய கூடாது.? பட்டியலிட்ட தேர்தல் ஆணையம்
நாளை மாலை 6 மணிக்கு பிறகு என்ன செய்யலாம்.? என்ன செய்ய கூடாது.? பட்டியலிட்ட தேர்தல் ஆணையம்
தப்பு தப்பா மொழிபெயர்ப்பு.! செல்வப்பெருந்தகையை கழட்டி விட்டாரா ராகுல்.? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
தப்பு தப்பா மொழிபெயர்ப்பு.! செல்வப்பெருந்தகையை கழட்டி விட்டாரா ராகுல்.? அண்ணாமலை பரபரப்பு அறிக்கை
EPS Vs Vijay : ’விஜயின் தாக்கம்’ என்னவாகும் அதிமுக? ஓபனாக பதிலளித்த EPS..!
’விஜயின் தாக்கம்’ என்னவாகும் அதிமுக? ஓபனாக பதிலளித்த EPS..!
Embed widget