மேலும் அறிய
Madurai Hc ; நியோமேக்ஸ் மோசடி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் செயல்பட்ட அரசுக்கு நீதிபதி பாராட்டு !
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

மதுரைக் கிளை
29 இடங்களில் உள்ள 10158 காலி இடங்களுக்கான ஏல விற்பனை மார்ச் 17ஆம் தேதி துவங்குகிறது என தமிழ்நாடு அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அறிக்கை தாக்கல்.
நியோ மேக்ஸ் வழக்கு
மதுரையை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகவும் முதலீடு முதிர்வு காலத்தில் பல மடங்கு அதிகமாக திருப்பித் தரப்படும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர். இந்த வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்
மோசடி யில் ஈடுபட்ட. இயக்குநர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளனர், ஜாமினில் வெளிவந்த இவர்கள் நீதிமன்ற உத்தரவுகளை மீறி முதலீட்டாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

மீண்டும் விசாரணைக்கு வந்தது
கடந்த வார விசாரணையின் போது நீதிபதி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் முதலில் கட்டடங்கள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட, 2000 கோடி சொத்துக்களை பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி. 10158 காலி மனை இடங்கள் 29 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது இந்த நிலங்களை முதல் கட்டமாக விற்பனை செய்ய உள்ளோம் இந்த நிலங்களை யார் வேண்டுமானாலும் முறைப்படி பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் அதற்கான பதிவு வருகின்ற ஒன்பதாம் தேதி துவங்குகிறது தொடர்ந்து மூன்று நாட்கள் ஆன்லைனில் மூலம் இடம் வாங்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். அதிக விலைக்கு நிலங்களை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகைகளை பெற்றுக் கொடுப்பதுதான் அரசின் நோக்கம். இவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 17ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை தொடர்ந்து விற்பனை செய்து பதிவு செய்து கொடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
எந்த உள்நோக்கமும் பிறப்பிக்க கூடாது
இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ரஜினி நிலங்களை ஏலம் எடுப்பதற்கு மெயில் மூலமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறியுள்ளது கிராமப்புற மக்களுக்கு வசதிப்படாது. ஆகவே வாட்ஸ்அப் போன் எண்கள் மூலமாக தகவல் தெரிவிக்கவும் வசதி செய்து தர வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அரசு தரப்பில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தேவையான அளவு மெயில் ஐ.டி.களை அதிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஆலோசனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி நீதிமன்றத்தின் நோக்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்பி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆகவே நிலங்களை அதிக விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் நிலங்களை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் அதில் எந்த உள்நோக்கமும் பிறப்பிக்க கூடாது.
விசாரணை ஒத்தி வைத்துள்ளார்.
எனவே இது குறித்து மக்களிடத்தில் உரிய முறையில் தெரிவித்து முறையாக விற்பனை செய்து கொள்ளலாம் என கூறிய நீதிபதி இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வது என்பது குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறிய வீடியோக்களை வெளியிட வேண்டும்
என்றும் இதே போல் தொடர்ந்து செயல்பட்டு பாதிக்க பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















