மேலும் அறிய

பாஜகவை வீழ்த்த இடது சாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மதுரையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

பா.ஜ.கவை வீழ்த்த இடது சாரி, மதசார்பற்ற ஜனனாய சக்திகள் ஒன்றினை வேண்டும் என மதுரையில் நடைபெற்ற சி.பி.எம் மாநில மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

மதுரையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன் துவக்க நிகழ்வாக கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டு கொடியை சி.பி.எம் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்றி வைத்தார், மாநாட்டில் சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் சி.பி.எம் நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாடகர்கள், லதா மங்கேஷ்கர், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், நடிகர் விவேக் மற்றும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பாஜகவை வீழ்த்த இடது சாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மதுரையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
 
மாநாட்டில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில் "மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 410 கல்வெட்டுக்கள் உள்ளன. 410 கல்வெட்டுகளில் 78 கல்வெட்டுகள் முழுமையாக எழுத்துக்களால் உள்ளன, 78 கல்வெட்டுக்களில் 77 கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளது. ஒரே ஒரு கல்வெட்டு மட்டும் சமஸ்கிருத மொழியில் உள்ளது. உலகின் ஆதீ மொழிகளில் தமிழ் மொழி மூத்த மொழியாக திகழ்கிறது" என பேசினார்.

பாஜகவை வீழ்த்த இடது சாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மதுரையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
 
மாநாட்டில் சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில் "எப்ரல் 6 ஆம் தேதி சி.பி.எம் 23 ஆவது அகில இந்திய மாநாடு கேரளா மாநிலம் கண்ணுரில் நடைபெற உள்ளது, 4 ஆண்டுகளில் இந்தியாவில் பாஜக ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி வருகிறது, நாட்டு மக்களின் ஜனநாயக, குடியுரிமை பறிக்கப்பட்டு வருகிறது, பாஜக இந்துத்துவ கொள்கையை அமலாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பாராளுமன்றங்களில் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதம் செய்ய முடியவில்லை, நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை பாஜகவின் எதிரிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பொதுத்துறையை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முயல்கின்றனர். கார்ப்பரேட்டுகள் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கின்றனர், ஜனநாயக, குடிமையலில் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

பாஜகவை வீழ்த்த இடது சாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மதுரையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
 
இந்திய மக்களின் உரிமைகளை பறிக்கிறது, கொடுமையான சட்டங்களை இயற்றி மக்களை துன்புறுத்துகிறது, இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது, நாட்டின் அடிப்படை ஜனநாயக அம்சமான சிஏஏ, காஷ்மீர் வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன, நாட்டின் அடிப்படை அமைப்புகள் தகர்க்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது,  நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பெறப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன, இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்கிறோம், நாட்டின் அடிப்படையான 4 தூண்களை தகர்த்து எறிகிறது, கூட்டாச்சி தத்துவம் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
 
நாட்டின் பன்முக கலாச்சார, மொழிகளை காக்கும் அரசியல் சட்டத்தை இந்திய அரசின் ஒருமைப்பாட்டை தாக்கும் வகையில் ஒற்றை நாடாக மாற்ற முயல்கிறது மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு ஏராளமான மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தியுள்ளது, சிஏஏ சட்டத்தை இயற்றியபோது மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது, வேளாண் சட்டங்களை கொண்டு வந்தபோது மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் என்றவுடன் சட்டத்தை திரும்ப பெற்றது, மத்திய அரசை கண்டித்து 4 முறை பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையிலும் பாஜக மீண்டும் ஏன் வெற்றி பெறுகிறது என்பதை சிந்திக்க வேண்டும், ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரானது, மாநிலங்கள் கலாச்சார பண்பாண்டை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை புகுத்த முயல்கின்றனர். ஒன்றிய அரசு என்பதையே ஏற்க மறுக்கிறது.
 
மத்திய அரசு இந்துத்துவா என்பதை முன்னிலைப்படுத்துகிறது, நாட்டின் விலைவாசி, வேலையின்மை குறித்து பேசுவதில்லை, மக்களை மத ரீதியாக பிரிக்கும் பேச்சுகளை பேசி வருகின்றனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்து மக்களை இணைக்க முயல்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு உணர்வை புகுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இந்துத்துவா என்ற கொள்கைகளை எடுத்துரைத்து மக்களின் பிரச்சனைகளை மறைத்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் தங்களது கொள்கைகளை புகுத்துகின்றனர். காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் 90களில் நடைபெற்ற காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் சார்ந்த படம், 90 கலவரத்தில் 89 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டதாக ராணுவ தகவல் உள்ள நிலையில், 1600 இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் அதை மறைத்து இந்துகள் கொல்லப்பட்டதாக கூறி முஸ்லிம் மோதலை உருவாக்குகிறது.
 
விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும் அதற்கு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் அதற்கு ஒற்றுமை வேண்டும், அரசியல் ஆதாயத்திற்காக பாஜக அரசு மக்களை பிரித்தாள்கிறது, அதற்காக தான் இது போன்ற மதவாத முயற்சிகளை கையில் எடுக்கிறது, காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்காதவர் தேச பக்தி அற்றவர்கள் என கூறுவது நாட்டின் தேச பக்தியை இந்த அளவிற்கு தான் எடுத்துரைக்கிறது, மதசார்பற்ற அடிப்படையை தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் பகவத் கீதையை பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்கின்றனர்.
 
பகவத்கீதை மூலமாக வன்முறை தத்துவத்தை கொண்டு செல்ல பாஜக முயல்கிறது, பாஜக பகவத் கீதையை ஏன் முன்னுறுத்துகின்றனர் என்றால் சாதி ரீதியான அடுக்ககளை நியாயபடுத்துவதை அந்த நூல் காட்டுகிறது, மேல் சமூகத்தில் பிறந்தவர்களுக்கு கீழ் சமூகத்தில் பிறந்தவர்கள் சேவை ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் பகவத்கீதை போதனைகள் உள்ளது, சாதிய கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் பகவத் கீதை உள்ளது, பெண் என்றால் தந்தை கணவனுக்கு பணியாற்றி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பகவத்கீதை கூறுகிறது, கொரோனா பெறுந்தொற்றுக்கு பின்னான நிலைமையை கண்காணித்து வருகிறோம்.
 
அமெரிக்க ஏகாதியபத்தியம் சோசலிய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளனர் கொரோனாவை பயன்படுத்தி சீனாவை தனிமைப்படுத்தி வருகின்றனர், ஏகாதிபத்தியம், சோசியலிசத்திற்கு எதிரான மிகப்பெரிய சூழல் உருவாகியுள்ளது, ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு தில்லுமுல்லுகளை மேற்கொள்கிறது, இந்தியாவை அமெரிக்காவின் ஜீனியா் பார்ட்னராக மாற்றும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது, அமெரிக்க ஏகாதியபத்தியத்தை பின்பற்றி அதனை ஆதரிக்கும் அருவருடியாக செயல்பட்டு வருகிறது, மோடி அரசாங்கத்தை முறியடிப்பது நமது கடமை, பெண்ணடிமை, சாதிய தன்மையை நியாயப்படுத்தும் பகவத் கீதையை முன்னிறுத்தி பாஜகவின் கட்டமைப்பை கொண்டு செல்ல முயல்கின்றனர்.
 
இந்துத்துவா அமைப்புகளின் இது போன்றவற்றை எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது, மார்க்சிஸ்ட் மற்றும் இடது சாரி இயக்கங்கள் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும், கொள்கைகள் என்றால் நம்மால் நான் முடியும், இதனை மோடி புரிந்து வைத்துள்ளார், பாஜக எம்பிகளிடம் பேசியபோது இடதுசாரிகள் குறித்து பேசி வருகிறார், கொள்கை ரீதியாக எதிர்த்து நிற்கும் இயக்கம், தத்துவார்த்த ரீதியாக எதிர்த்து முறியடிக்க முடியும், உழைப்பாளிகளை திரட்டி மோடிக்கு எதிராக போராடுகிறோம், எந்தவித அச்சுறுத்தல் இன்றி போராடுகிறோம், கேரள, மேற்குவங்களம் வர்க்க எதிரிகளை எதிர்த்து அச்சமின்றி செயல்படுகிறோம், இடது சாரிகளால் மட்டுமே எதிர்சக்திகளை வீழ்த்த இயலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரி சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும், தேர்தலின்போது எதேச்சாதிகார சக்திகளை வீழ்த்த மதசார்பற்றவர்களை இணைத்து இந்துத்துவாக சக்திகளை வீழ்த்த வேண்டும், தமிழகத்தில் இடதுசாரிகளை பலப்படுத்துவதன் மூலமாக தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக போன்ற ஏதேச்சியதிகார சக்திகளை வீழ்த்த முடியும்" என பேசினார்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget