மதுரை - சிங்கப்பூர் பயணத்துக்கு, இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்..
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு மீண்டும் பயண சேவை துவங்குகிறது. இது என்னைப் போன்று வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
கொரோனாபெருந்தொற்றின் காரணமாகசர்வதேச விமான சேவை இந்தியாவிற்கு வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந் துள்ளதால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 27ஆம் தேதி அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Happy News to the Travelers😁
— Thangadurai (@thangadurai887) March 29, 2022
After 2 years, Singapore-Madurai-Singapore
(SIN-IXM-SIN) commercial flight operations are starting today.#Madurainewsupdates#aviation #Maduraiairport @MaduraiAirport pic.twitter.com/xQeaRsTCUO
இந்நிலையில் மதுரையில்இருந்து சிங்கப்பூருக்கு தடை செய்யப்பட்டிருந்த நேரடி விமான சேவை வரும் மார்ச் 29ம் தேதி இன்று முதல் வாரம் இரு நாட்கள், செவ்வாய் மற்றும் சனிகிழமைகளில் இயக்க ஏர் இந்தியா விமானம் முடிவு செய்துள்ளது.
#Abpnadu | கொரோனாவால் ரத்து செய்யப்பட்டு இருந்த மதுரை - சிங்கப்பூர் நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம். பிரதிவாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மதுரை - சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும். | Further reports to follow. @abpnadu | @SRajaJourno | pic.twitter.com/JlzbOqkV2w
— Arunchinna (@iamarunchinna) March 29, 2022
இதனை அடுத்து இன்று சிங்கப்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் விமானம், சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். இத்தகவலை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இது குறித்து மேலூர் பழைய சுக்காம்பட்டி இளைஞர் கலைவாணன் கூறுகையில்..,”உலகத்தை அச்சுறுத்திய கொரோனாபெருந்தொற்றின் காரணமாகசர்வதேச விமான சேவை இந்தியாவிற்கு வந்து செல்ல தடை செய்யப்பட்டது. தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந் துள்ளதால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு மீண்டும் பயண சேவை துவங்குகிறது. இது என்னைப் போன்று வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அரசு மருத்துவமனை கட்டில் உடைந்து பச்சிளங் குழந்தைக்கு காயம்.. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி..