மேலும் அறிய
Advertisement
railway: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம் ! முழு விவரம் உள்ளே!
பல்வேறு இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெள்ளனூர் - புதுக்கோட்டை, திண்டுக்கல் - அம்பாத்துரை ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது.
மேலும் அக்டோபர் 27, 28 மற்றும் 31 ஆகிய நாட்களில் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருமணம் செய்துவைக்க முடிவு செய்த பெற்றோர் - மதுரையில் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை
கொடைக்கானல் ரோடு மற்றும் வாடிப்பட்டி ரயில் நிலையங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அக்டோபர் 17 முதல் அக்டோபர் 22 வரையும் மற்றும் அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 வரையும் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion