மேலும் அறிய
Advertisement
குறையும் கொரோனா...! இயல்பு நிலைக்கு திரும்பும் ரயில்வே...! இணைக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள்
கொரோனா தொற்றின் தாக்கம் குறையத்தொடங்கி உள்ள நிலையில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன
கொரோனா தொற்றுக்கு பிறகு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் முன்பதிவு இருக்கை வசதி உள்ள பெட்டிகளாக மாற்றப்பட்டிருந்தன. தற்போது படிப்படியாக பல்வேறு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 3 ஆம் தேதி முதல் மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் (12651), மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687), ராமேஸ்வரம் - அயோத்தியா கன்டோன்மென்ட் விரைவு ரயில் (22613), தூத்துக்குடி - ஓகா விவேக் விரைவு ரயில் (19567), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் (20895), திருநெல்வேலி - பிலாஸ்பூர் விரைவு ரயில் (22620), ஜூலை 4 முதல் திருநெல்வேலி - ஜம்மு ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா விரைவு ரயில் (16787), திருநெல்வேலி - ஜாம்நகர் விரைவு ரயில் (19577), ஜூன் 30 முதல் திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (11022),
ஜூலை 1 முதல் மதுரை - மும்பை லோக்மான்ய திலக் முனையம் விரைவு ரயில் (22102), ராமேஸ்வரம் - ஓகா விரைவு ரயில் (16733), ஜூலை 6 ஆம் தேதி முதல் முதல் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயில் (22535), கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில் (22630), அகியவற்றில் முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகள் பயணிகள் வசதிக்காக முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. மேலும் ஜூலை 1 முதல் கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில் (12641), நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் (16340), ஜூன் 30 முதல் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி விரைவு ரயில் (16352) ஆகியவற்றில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.
அதே போல் கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்ரல் 15 முதல் இயக்கப்பட இருக்கிறது. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) சென்னையில் இருந்து ஏப்ரல் 15 முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் (12690) நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17 முதல் ஞாயிற்று கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்று சேரும். நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை செல்லும் விரைவு ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நிற்காது. கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - BSF வீரரை கண்டுபிடித்து தரக்கோரிய ஆட்கொணர்வு மனு - கமாண்டண்ட் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion