Palani thaipusam 2025: நாளை தொடங்கும் தைப்பூச விழா... பழநியை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்..
Palani thaipusam 2025 : பழனி தைப்பூசம் ஐந்தாம் நாள் முன்னிட்டு அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 5ம் தேதி முதல் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி நாளை காலை 10ம் தேதியும், தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் முருக பெருமானிற்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
தமிழ் கடவுள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் வணங்கப்படுபவர் முருகன். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி சேர்ந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசம் நாளை 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான நாட்களில் ஒன்று தைப்பூசம். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். தைப்பூசத் ஐந்தாம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்; சிக்கிய விசிக நிர்வாகி... பகீர் கிளப்பும் கனியாமூர் வழக்கு!
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று தைப்பூசத் திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து கிரிவலம் பாதையில் குவிந்து வருகின்றனர். மலைக்கோவிலுக்கு சென்று வர ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு மேலே செல்ல குடமுழக்கு நிலவரங்கம் வழியாகவும் தரிசனம் முடித்து கீழே இறங்க படிப்பாதை வழியாகவும் தேவஸ்தான நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தரிசன கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : "கண்டிப்பா இங்க போயே ஆகணும்" புதுச்சேரியில்ஒரு தீவு இருக்கா...! உங்களுக்கு இந்த இடம் தெரியுமா ?
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கூட்டம் அதிகம் உள்ள காரணத்தால் பக்தர்களை கயிறு கட்டி 500க்கு பக்தர்கள் மட்டும் மேலே அனுப்பி வைக்கப்படுகின்றனர் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர். நாளை ஆறாம் நாள் திருவிழாவில் ஊர் கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வும் அதை தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெற உள்ளது 7 நாள் திருவிழாவில் திருத்தேர் நிகழ்வும் நடைபெற உள்ளது.
பாதயாத்திரை வந்த பக்தர்கள் பழனி சண்முக நதியில் புனித நீராடி பின்பு உடல் முழுவதும் அலகு குத்தியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர். ஒரு பறவைகாவடியில் 10 பக்தர்கள் உடல்முழுவதும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்று ராட்சத க்ரேன்களில் உடல் முழுதும் அலகு குத்தி பறவைக் காவடிகள் வந்தவர்களைக் கண்டு பொதுமக்கள் பார்த்து மெய்சிலிர்த்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

