மேலும் அறிய

போக்சோ சட்டம்: இளைஞருக்கு அதிர்ச்சி தீர்ப்பு ரத்து.. அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு அவசியம் - மதுரை அமர்வு உத்தரவு !

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - நீதிமன்றம்.

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை அமர்வு உத்தரவு.

குற்றவழக்கு
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் அவரது நண்பர் சகோதரியை, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அப்போது அவருக்கு வயது 16 என்பதால், மகேஷ் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருமணம் செய்துகொண்டு,  பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 1098 குழந்தைகள் உதவி எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 
 
குற்றச்சாட்டை ஏற்க முடியாது
 
இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம், 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை  விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மகேஷ் மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா,  வயதை உறுதி செய்வதற்கான அசல் ஆவணங்கள் இருந்தும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அவற்றை ஆதாரமாக ஏற்க முடியாது. வயது நிரூபிக்கப்படாததால் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஆகவே  தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
 
போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
 
ஒப்புதல் காதல் உறவுகள், பெற்றோரின் எதிர்ப்பால் பின்னர் போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுவது கவலை அளிக்கிறது. போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த  தமிழக அரசின் முதன்மை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசின் முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget