பழனி கோயிலில் பக்தர் மீது தாக்குதல்?; போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களால் பரபரப்பு
கோவில் பாதுகாவலர்கள், கோவில் அதிகாரிகள் இடித்துக் கொண்டு வந்த எடப்பாடி சேர்ந்த சந்திரன் என்பவரை இழுத்துக் கொண்டு சென்று தாக்கியதாகவும் மண்டையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலைக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோயிலில் நேற்று எடப்பாடி பக்தர்கள் ஈரோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். இதில் ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல சிறப்பு வழி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் முந்தியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இந்த நிலையில் கோவில் பாதுகாவலர்கள், கோவில் அதிகாரிகள் இடித்துக் கொண்டு வந்த எடப்பாடி சேர்ந்த சந்திரன் என்பவரை இழுத்துக் கொண்டு சென்று தாக்கியதாகவும் மண்டையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பழனி மலைக்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி சேர்ந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தங்களை தாக்கிய பாதுகாவலர் வரும் வரை நாங்கள் கலந்து செல்ல மாட்டோம் என பக்தர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவில் உதவி ஆணைய லட்சுமி அவர்கள் தாக்கியதாக கூறப்படும் கோவில் அதிகாரி மற்றும் பாதுகாவலர்களை சஸ்பெண்ட் செய்வதாக கூட்டத்தில் கூறினார். அதனைக் கேட்ட ஒரு பிரிவினர் சென்று விட்டார்கள். ஒரு பிரிவினர் அந்த பாதுகாவலர்கள் வரும் வரை நாங்கள் செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.