சென்னை சகஜ நிலைமைக்கு திரும்புவதால் வழக்கமான ரயில் போக்குவரத்து துவக்கம்!
மதுரை எக்ஸ்பிரஸ் ஆகியவை குண்டூர், நந்தியால், யெர்ரகுண்டலா, ரேணிகுண்டா, காட்பாடி, விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் வரலாறு காணாத கனமழை
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
- பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி மனு கொடுக்க வந்த ஆட்டோ டிரைவர் - தேனியில் பரபரப்பு
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்பது, முகாம்களுக்கு கொண்டு செல்வது, தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது, அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறுமுனையில், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, சாலையில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவது, மின்சார விநியோகத்தை மீண்டும் தொடங்குவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை லேசாக சகஜ நிலைமைக்கு திருப்புவதால் வழக்கமான ரயில் போக்குவரத்து துவக்க திட்டமிடப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.