மேலும் அறிய
Advertisement
மடத்திற்குள் நுழைந்தாலே நித்தியானந்தா கைதுதான்.. மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி
”எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன். நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் என தெரிவித்தார்” - 293-வது ஆதீனம் அதிரடி.
"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்பட்ட மதுரை 292ஆவது ஆதீனம் அருணகிரிநாதர். அவரது 77ஆவது வயதில் கடந்த 8ஆம் தேதியன்று சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 9:33 அனுமதிக்கப்பட்டார். கடந்த 13ஆம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் ஆதீனம் நடைமுறைப்படி முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
292ஆவது மதுரை ஆதீனமான அருணகிரிநாதர் காலமான நிலையில் கடந்த 14ஆம் தேதி தருமை ஆதீனம் ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293ஆவது மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமைபுர ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக சுவாமிகள் முன்பாக நடைபெற்றது. பல்லாக்கில் வந்த 293வது ஆதீனத்திடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசீர்வாதம் பெற்று பிரசாதம் வாங்கிச் சென்றனர். பல்லாக்கு ஊர்வலத்திற்கு முன்னர் கோயில் யானைகள் , ஒயிலாட்டம் , கரகாட்டம் , மேள தாளங்கள் முழங்க , நாதஸ்வர இசையில் நிகழ்ச்சியுடன் ஊர்வலம் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இன்று 293- வது மதுரை ஆதினம் செய்தியாளர்களை சந்தி்த்து பேசினார்,” நான் மக்களோடு மக்களாக எப்போதும் தொடர்பில் இருப்பேன். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொண்டவன் நான். இப்படி பல்வேறு அற போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளேன். எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன். நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார் என தெரிவித்தார்.
சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைப்பு வந்தால் கலந்துகொள்வீர்களாக என்ற கேள்விக்கு?
சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன் நான் குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுகொள்கிறேன். கிறிஸ்துவர்களும், முகம்மதியவர்களும் இந்து சமயத்தில் தரப்படும் விபூதியை பூசிக்கொள்வார்களா? என கேள்வி எழுப்பியதோடு, இந்து சமயத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏற்றுகொள்வார்களா? என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்” என்றார்.
மேலும் இதை படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion