இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.27 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படலாம்.
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup 2026 Prize Money: ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லும் சாம்பியனுக்கும், மற்ற அணிகளுக்குமான பரிசுத்தொகை விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

T20 World Cup 2026 Prize Money: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான முழு பரிசுத்தொகை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இறுதிப்போட்டியில் இந்தியா சாதிக்குமா?
ஐசிசி வரலாற்றில் முதல்முறையாக 20 அணிகளுடன் தொடங்கிய டி20 உலகக் கோப்பை அதன் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் சாம்பியன் பட்டம் வென்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றுவதோடு, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெறுமா? என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரம், சாம்பியன்களுக்கும், இதர அணிகளுக்கு இந்த போட்டியில் வழங்கப்பட உள்ள பரிசு என்ன என்ற கேள்வியும் நிலவுகிறது. அதற்கான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டி20 உலகக் கோப்பை - பரிசுத்தொகை விவரங்கள்:
லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று, அரையிறுதி என மூன்று சுற்றுகளை கடந்த பிறகே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. சுற்றுகளுக்கு ஏற்றபடி அணிகளுக்கான பரிசுத்தொகைகள் மாறுபடும். அதாவது லீக் சுற்றில் பங்கேற்ற அணிகளுக்கு ஒரு பரிசுத்தொகையும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ஒரு பரிசுத்தொகையும், அங்கிருந்து அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு மற்றொரு விதமான பரிசுத்தொகையும் வழங்கப்படும். இதுபோக சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பரிசுத்தொகை:
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகங்கள் இணைந்து நடத்தும் இந்த டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகைக்கு மட்டுமே, 120.37 கோடி ரூபாயை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஒதுக்கியுள்ளது. டாலர்களில் பரிசுத்தொகை வழங்கப்படுவதால், வாசகர்களின் எளிய புரிதலுக்காக அது ரூபாயில் மாற்றி குறிப்பிடப்படுகிறது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப இந்த தொகையானது சற்றே மாறுபடலாம். அதன்படி, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.27 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படலாம். கடந்த 2024ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.20.4 கோடியை பரிசாக பெற்றது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியுறும் அணிக்கு சுமார் ரூ.14.65 கோடி இரண்டாவது பரிசாக வழங்கப்பட உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இது ரூ.10.67 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரங்கள்:
- நடப்பு டி20 உலகக் கோப்பையில் பதிவு செய்த ஒவ்வொரு வெற்றிக்கும் அணி நிர்வாகத்திற்கு ரூ.28.50 லட்சம் வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது
- அரையிறுதிக்கு முன்னேறிய தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு சுமார் ரூ.7.24 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது
- ஒட்டுமொத்தமாக புள்ளிப்பட்டியலில் 5 முதல் 12 வரையிலான இடங்களை பிடித்த அணிகளுக்கு, தலா சுமார் ரூ.3.48 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது
வீரர்களுக்கான விவரங்கள்:
- நடப்பு டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதிற்காக இந்தியாவின் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 8 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்த விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ராவிற்கு சுமார் 12.3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அது இன்னும் சற்று கூடுதலாக வழங்கப்படலாம்.
- இதுபோக தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களும் தனிப்பட்ட முறையில் கவுரவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Frequently Asked Questions
2026 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும்?
2026 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வியுறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும்?
இறுதிப்போட்டியில் தோல்வியுறும் அணிக்கு சுமார் ரூ.14.65 கோடி இரண்டாவது பரிசாக வழங்கப்படும்.
2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும்?
அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு சுமார் ரூ.7.24 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் ஒரு வெற்றிக்கு அணி நிர்வாகத்திற்கு எவ்வளவு வழங்கப்படும்?
நடப்பு டி20 உலகக் கோப்பையில் பதிவு செய்த ஒவ்வொரு வெற்றிக்கும் அணி நிர்வாகத்திற்கு ரூ.28.50 லட்சம் வழங்கப்படும்.
2026 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
கடந்த ஆண்டு தொடர் நாயகன் விருதுக்கு சுமார் 12.3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சற்று கூடுதலாக இருக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















