மேலும் அறிய
Advertisement
Madurai: எடப்பாடியாரும் எங்கள் ரத்தம் தான்.... தேவர் ஜெயந்திக்கு ஆர்.பி.உதயகுமார் ரத்தத்தால் அழைப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வருகை தரும் ரத்த உறவு எடப்பாடியாரை ரத்தத்தால் அழைக்கும் வகையில் ரத்த கையெழத்திட்டு அழைக்கிறோம்.
வருகின்ற 30-ஆம் தேதி தேவர் குருபூஜை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாடி பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரவேற்கும் வகையில் ரத்த உறவை ரத்த கையெழத்துயிட்டு வரவேற்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ரத்தத்தால் வரவேற்பு
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு, அன்று மாமன்னர் மருதுபாண்டியார்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு, அதனை தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்துகிறார். ஆளுங்கட்சி இருக்கும்போதும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி தொடர்ச்சியாக வீரவணக்கம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து பசும்பொனுக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் அனைவரும் வரவேற்கின்றனர். அதனை தொடர்ந்து கழக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் ரத்த உறவை அழைக்கிறது என்று நாங்கள் ரத்த கையெழத்துயிட்டு எடப்பாடியாரை வரவேற்கிறோம்.
234 தொகுதியும் எங்கள் இலக்கு
2026 தேர்தலில், திமுக 200 இடங்களில் இலக்கு என்று கூறி வருகிறார்கள். ஆனால் நாங்கள் 234 தொகுதியில் எங்கள் இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம், இதில் அதிமுக கூட்டணி தேவைக்கு மேல் பெரும்பான்மை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்றைக்கு 234 தொகுதிகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களில் தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சி உருவாகியுள்ளது. எடப்பாடியார் பொதுக்கூட்டங்களில் பேசினார், அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிறுபிள்ளை தனமாக பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எடப்பாடியார் உழைப்பால் பதவிக்கு வந்தவர், ஆனால் உதயநிதி ஸ்டாலின் பிறப்பால் பதவிக்கு வந்தவர். எடப்பாடியார் 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் கிளைக் கழக செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மாவட்ட கழக செயலாளர், அம்மா பேரவை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்தவர். இது எல்லாம் அரசியல் கத்துக் குட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிய வாய்ப்பு உள்ளதா? வரலாறு தெரியாமல் எதையும் உதவி பேசக்கூடாது. கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டும் வைத்து நடிகர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் துணை முதலமைச்சர், ஆக்டிங் முதலமைச்சர் இன்று செயல்பட்டு வருகிறார் இன்றைக்கு துணை முதலமைச்சராகியுள்ள உதயநிதியை திமுகவினர் ஏற்கவில்லை, தற்போது திமுக நிலவரம் கலவரமாக உள்ளது இதை யாரும் மறைக்க முடியாது.
கருத்தை வாபஸ் பெற வேண்டும்
உதயநிதி ஸ்டாலின் படிப்படியாக வரவில்லை, இதை திமுக கூட ஏற்றுக்கொள்ளவில்லை என எடப்பாடியார் சொன்னதற்கு என்ன தேச குற்றம் உள்ளது போல உதயநிதி பேசியிருக்கிறார். எடப்பாடியாரை பற்றி பேசிய கருத்தை வாபஸ் பெற வேண்டும் இல்லையென்றால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், பொதுவாக வயதிற்கு ஏற்ற அனுபவங்கள் இருக்க வேண்டும். இன்றைக்கு திமுகவிற்கு மெஜாரிட்டி இருப்பதால் இப்படி அனுபவம் இல்லாதவர்களை உக்கார வைக்கலாமா? சென்னையில் மழை பெய்த போது எடப்பாடியார் சேலம் சென்று விட்டார் என்று கூறுகிறார் உதயநிதி, இதே கஜா புயல் ஏற்பட்டபோது அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு எடப்பாடியார் நேரடி சென்று மக்களை காப்பாற்றினார், அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்த முதலமைச்சரும் சென்றதில்லை முதன் முதலாக சென்றவர் எடப்பாடியார் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion