மேலும் அறிய
Advertisement
மதுரை மதுரைதான்.. இன்சல்ட் பண்ணாபொறுத்துக்க மாட்டாங்க - காலணி வீச்சு குறித்து அண்ணாமலை கருத்து
”மதுரை மக்களை யாராவது இன்சல்ட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அண்ணாமலை பேசினார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில்,,’
பா.ஜ.க இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களுக்கும் சேர்த்து சேவை செய்து கொண்டிருக்கிறது. அதனால் சிதம்பரம் அவர்களுக்கு இது, புரிந்தாலும் புரியாதது போல் பேசுவார். பா.ஜ.க., எந்த ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனத்தையும் விற்கவில்லை. இவர் நிதி அமைச்சராக இருந்த பொழுது லாபகரமாக இயங்கிய பல மத்திய அரசு நிறுவனங்களை நஷ்ட்டமாக்கிய பெருமை ப.சிதம்பரத்தை சேரும்.
மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் வாகனத்தில் செருப்பு வீச்சு குறித்த கேள்விக்கு
மதுரை விமான நிலையத்தில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த லெட்சுமனின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக பா.ஜ.க., தொண்டர்கள் அங்கு சென்றிருந்த பொழுது நிதி அமைச்சர் பி.டி.ஆர்., தியாகராஜன், பா.ஜ.கவினரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியடோடு, யாரும் அஞ்சலி செலுத்தக் கூடாது. பா.ஜ.கவினர் அஞ்சலி செலுத்த தகுதியற்றவர்கள் என்ற வார்த்தையை அமைச்சர் கூறியுள்ளார். நாங்கள் வன்முறையை கையில் எடுக்கும் கட்சி அல்ல கட்சியினரோ பொதுமக்களோ அதுபோல் செய்திருந்தால் செய்யக்கூடாது, எனஅறிவுறுத்துவோம் பா.ஜ.க தொண்டர்களை அங்கு நிற்க கூடாது என்று சொன்ன அமைச்சர் பதவி விலக வேண்டும். மதுரை மக்களை யாராவது இன்சல்ட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எதற்காக அமைச்சர் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களை சீண்டி பார்க்க வேண்டும் எதற்காக நீங்கள் தகுதி அற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்.
இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சர் கேட்க வேண்டும். அமைச்சர்களிடம் பத்திரிக்கையாளர்கள் ஆதாரத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. உதாசீனத்துடன் பதில் அளிக்கின்றனர். அமைச்சர்களுக்கு தங்கள் இலாக்கா மீது தங்கள் செய்யக்கூடிய வேலைகளுக்கு மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. மக்கள் மன்றத்தில் பேசுவதற்கு அவர்களுக்கு எந்த விசயமும் இல்லை தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் கோபத்தின் வெளிப்படாத்தான் இதை நான் பார்க்கிறேன்” என்றார்.
இந்நிலையில் அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்..,” இன்று மதுரை விமானநிலையத்தின் வெளியே, இந்திய திருநாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர் திரு.லட்சுமணன் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் வழியில் மாண்புமிகு தழிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், சகோதரர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் வாகனத்தை வழிமறித்து தாக்க முற்பட்ட பாஜக குண்டர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறை வெறியாட்டம் ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல. பாஜக-வின் இந்த அநாகரிக செயலுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டபூர்வமாக தகுந்த பதில் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion