(Source: ECI/ABP News/ABP Majha)
வைகையில் வெள்ளப்பெருக்கு; கரைப்பாலத்தை மூழ்கடித்து ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்
தண்ணீர் அதிகம் வந்த காரணத்தால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீரானது அதிகளவு வந்ததால் சாலையில் நீர் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதி, மூல வைகை, கிளை நதி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் வைகை அணையில் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியது. இதன் காரணமாக நேற்று இரவு வைகை ஆற்றில் இருந்து 10 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வைகை ஆட்சி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சிம்மக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது.
Vaigai flow close to 14000 cusecs..People to maintain vigil..Flow expected to reduce in next few hours !@UpdatesMadurai | @mani9726 | @Stalin__SP | @AjithFCMadurai | @mducollector | #Madurai | @cinnattampi pic.twitter.com/AaCdVGdtnf
— arunchinna (@arunreporter92) November 13, 2022
தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் இருமுனை கரையை தொட்டு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது... #Madurai https://t.co/jRbAItZ7ZC pic.twitter.com/ytJRTmZbLe
— எம். சின்னத்தம்பி (@cinnattampi) November 13, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்