தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
HIGH COURT: வரப்போகுது தீர்ப்பு - சிக்குவாரா அமைச்சர் செந்தில் பாலாஜி? நெருங்கும் பரபரப்பு கட்டம்..!
நேற்று முன்தினம் 511 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Watch video: துப்பாக்கி முனையில் எஸ்.யூ.வி கார் வழிப்பறிக் கொள்ளை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!
அதன்படி தண்ணீர் திறப்பு வினாடிக்கு 511 கன அடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 135.20 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 646 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்