மேலும் அறிய
Advertisement
மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு
மதுரை - செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் மதுரையில் இருந்து ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 24 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
services of #madurai - #secunderabab special train extended
— Arunchinna (@iamarunchinna) July 26, 2022
It was announced earlier that special train would run between Madurai and Secunderabad of Telengana till July. Now the services of these trains extended further for one more months. @TN_Trainusers @drmmadurai #TRAIN pic.twitter.com/ePwDlfkGKD
அதன்படி செகந்தராபாத் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 22 வரை திங்கட்கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை - செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையில் இருந்து ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 24 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்; பெண் போலீஸ் காயம்..!
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion