மேலும் அறிய
Advertisement
Crime: உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்; பெண் போலீஸ் காயம்..!
கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு, உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உள்பட 6 பேர் காயமடைந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை உசிலம்பட்டி, வாலாந்தூரில் கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உள்பட 6 பேர் காயமடைந்த நிலையில் போலீசார் குவிப்பு.#madurai | #usilampatti @Ajithbala1222 @jp_muthumadurai
— Arunchinna (@iamarunchinna) July 26, 2022
| @MaduraiEmerging pic.twitter.com/cB1RJzyVMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த வாலாந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று இக் கோயிலின் 48வது நாள் பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலுக்கு பாத்தியப்பட்ட வகையாறாக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பால் குடம் எடுத்தும் முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
' இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ’ - Crime: உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..!
இந்த ஊர்வலத்தின் போது கோயிலில் வளாகத்திலேயே இந்த கோயிலை கும்பிடும் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கம்புகளை கொண்டு தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் மேனகா உள்ளிட்ட வாலாந்தூரைச் சேர்ந்த மலர்விழி, பாண்டி, சங்கிலி, பாண்டி, வீர ராகவன், கல்யாணி உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion