மேலும் அறிய
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்: எங்கெங்கெல்லாம் தெரியுமா...?
Madurai Power Shutdown : மதுரை மாநகர் பகுதியில் நாளை 15.10.24 பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (15.10.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆனையூர் துணைமின்நிலையத்தில் உயரழுத்தமின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விருப்பதால் அன்றையதினம் கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை மதுரை மேற்கு செயற்பொறியாளர் C.லதா வெளிடுட்டுள்ள தகவல்.
ஆனையூர் துணைமின்நிலையத்தில் ஏற்படும் பகுதிகள்
பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி கூடல் நகர், RMSColony, சொக்கநாதபுரம் ராஜ்நகர், பாத்திமாகல்லூரி, பாத்திமாகல்லூரி எதிர்புறம் பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லெட்சுமிபுரம்” ஆகிய பகுதிகளாகும்.
அதே போல் மதுரை வடக்கு செயற்பொறியாளர் S.R. ஸ்ரீராம் வெளியிட்டுள்ள தகவல். ”மதுரை வடக்கு கோட்டத்திற்குட்பட்ட மாட்டுத்தாவணி துணைமின்நிலையம் மற்றும் அண்ணா பேருந்து துணையின் நிலையத்தில் 15.10.2024 செவ்வாய்க்கிழமை நாளை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், Dr.தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணாமாளிகை, SBI-குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு இராசாசி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, HA கான் ரோடு, E2 E2 ரோடு, ஒ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், BSNL தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப் மற்றும் தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, R.R. மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சிபுரம், சுத்தியமூர்த்தி 1,2,3,4,5,6,7 வது தெருக்கள், கோபுரம் சினிமாஸ் தியேட்டர் பகுதிகள், தாமஸ்வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னைநகர், SNA அப்பார்ட்மெண்ட், LIG காலனி, பள்ளிவாசல் தெரு, மௌவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, KTK தங்கமணி தெரு, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், ராமவர்மாநகர், பி.ஆர்.சி, புதூர், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின் ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர்காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல் அமீன்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்” ஆகும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















