மேலும் அறிய
Power Shutdown: மதுரை மக்களே (21.11.24) நாளை இங்கெல்லாம் பவர் கட் - முன்கூட்டியே எல்லாம் செஞ்சிடுங்க
Madurai Power Shutdown 21.11.24: நாளை மதுரை மாவட்டத்தில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரையில் மின்தடை - சித்தரிப்பு படம்
Source : ABPLIVE AI
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (21.11.2024) நாளை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் மின் தடை செய்யப்படுகிறது. தே.கல்லுப்பட்டி துணை மின் நிலையம், T.குன்னத்தூர் மற்றும் கள்ளிக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் விநோயகம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
தே.கல்லுப்பட்டி நகரை சுற்றிய பகுதி முழுவதும், ராம்நகர், ராமுணிநகர், பாலாஜிநகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, தே.குண்ணத்தூர், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி எம்.சுப்பலாபுரம், வில்லூர், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்னரெட்டிபட்டி, ஆவடையாபுரம், மத்தக்கரை, பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், M.புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லூர், சித்தூர், ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, பாரமவுண்ட் மில் ஏரியா, ராஜாராம் பவுடர் கம்பெனி, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு 21.11.2024 தினம் காலை 09.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை செயற்பொறியாளர் பி.முத்தரசு தெரிவிக்கின்றார்.
அதே போல் வலையங்குளம் துணை மின்நிலையத்தில் நாளை 21.11.24 மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குறுணி, நல்லூர், குசவன்குண்டு,மண்டேலாநகர், சின்னஉடைப்பு, வலையப்பட்டி, ஒ.ஆலங்குளம், கொம்பாடி முதலிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை தெருக்களில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் ; நோய் தொற்று ஏற்படும் அவலம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement