தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 21ஆம் தேதி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 23ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் எனவும் இரண்டு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.