மேலும் அறிய

விஜய், இடத்தை சொல்லட்டும் அங்கேயே விமான நிலைய அமைக்க முயற்சி எடுப்போம் - ஹெச்.ராஜா

அரிட்டாப்பட்டி சுரங்கம் அறிவிப்பிற்கு இன்னும் 24 மணி நேரமானால் உங்கள் குடி கெட்டுப் போய்விடுமா? - ஹெச்.ராஜா காட்டம்.

 
ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு
 
மதுரை ஜான்சி ராணி பூங்கா பகுதியில்  செய்தியாளர்களை சந்தித்த பி.ஜே.பி., மூத்த தலைவர் ஹெச். ராஜா...,” காரைக்குடியில் தமிழக முதல்வர் பேசும்போது நிலை தடுமாறி பேசி உள்ளார். வள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது திராவிடர்களின் உரிமை. வள்ளுவர் யார்? வள்ளலார் யார்? அடிப்படை ஞானம் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். திருக்குறள் கட்டமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில். அதன் அடிப்படையில் தான் திருக்குறளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவரை விட சனாதனி உண்டா? பல இடங்களில் ஹிந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். தங்க தட்டில் இருக்கும் மலம் இன்று தந்தை பெரியார் பேசினார். 
வள்ளலார் திருநீறில்லாமல் இருந்திருக்கிறாரா? 
 
நாங்கள் போட்டி போட வரவில்லை
 
முருகன் தோத்திரத்தை வள்ளலார் சொல்லியிருக்கிறார். அடுத்து மகாதேவ மாலை சிவனைப் பற்றி எழுதியிருக்கிறார், வள்ளலார் பெருமகனாய்விட மிகச் சிறந்த ஹிந்து உண்டா? களவாட நிதி உதயநிதி ஸ்டாலின், சனாதன இந்து தர்மத்தை பற்றி இழிவாக அழிப்பேன் என்று பேசினார். அதற்கு அவர் மீது பல வழக்குகள் உள்ளது. சனாதனம் என்று சொன்னால் இந்து மதம் என்று நீதிமன்றமே  சொல்லியுள்ளது. களவாடுவது கள்ள ரயில் ஏறி வருவது திராவிட மாடல்தான் அதில் நாங்கள் போட்டி போட வரவில்லை.  முதல்வர் சரியாக பேச வேண்டும். உங்களை விட களவாணி கூட்டம் இல்லை. அரிட்டாப்பட்டி சுரங்கம் அறிவிப்பிற்கு இன்னும் 24 மணி நேரம் ஆகட்டுமே இருந்தால் உங்கள் குடிகெட்டுப் போய்விடுமா?  நான் முன்னேற்றத்திற்கு எதிரானவன் அல்ல என்று ஜோசப் விஜய் பேசுகிறார், விமான நிலையம் வேண்டும் ஆனால் பரந்தூரில் இல்லை. நம்ப விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வரவேண்டும் விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தால், மத்திய சர்க்கார் அங்கு விமான நிலையத்தை அமைக்கும். எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்னைகள் புரிவதில்லை. 
 
கோயிலுக்கு போக வேண்டாம் என பேசியுள்ளார்
 
தற்போது சீமான் தொடர்ச்சியாக பெரியாரைப் பற்றி பேசி வருகிறார். ஆனால், சந்தேகம் இல்லாமல் ஈவேரா பத்தி முதலில் பேசியது எச். ராஜா தான் பாஜக தான்.  ஈவேரா தேச துரோகி, 47 ஆகஸ்ட் 15 துக்க தினம், கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லியவர். தேசத்துரோகி ,ஈவேரா தமிழ் விரோதி, தமிழ் மீது பற்று உள்ள எவரும் குச்சியால் கூட ஈவேராவை தொட மாட்டான், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள் தமிழிலை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது, வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசியவர் ஈவேரா, ஈவேரா ஒரு தலித் விரோதி, பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா,  பள்ளனும், பறையனும் கோயிலுக்குள் போகக்கூடாது, அப்படி போனால் சூத்திரன் பார்ப்பான் அளவிற்கு உயர மாட்டான் தாழ்ந்து போவான் என்று பேசியவர் ஈவேரா,
 
சீமானை ஆதரிக்கிறேன் 
 
பெண்களை விலைக்கு வாங்கி அனுபவித்தவர்கள் திராவிடக்காரர்கள். ஈவேரா விலைமாதர் வீடு புகுந்து வருவார், நண்பரோடு போவார், அதனால்தான் கூட்டு பலாத்காரம் நடக்கிறது.  காவிரி ஆற்றங்கரையில் நண்பர்களோடும் விலை மாதர்களோடும் கூத்தடிப்பார்,என்று  சுவாமி சிதம்பரனார் பேசியுள்ளார் இது அவரது வார்த்தை, வழக்கு கொடுத்தால் அவர் மீது கொடுக்க வேண்டும். ஈவேரா ஒரு விலங்கு, விலைமாதர்களோடு கூத்தடிக்க அவரது மனைவி சமையல் செய்து அனுப்ப வேண்டும். என்று பேசினார். சீமான் விஷயத்தில் தற்போது நான் அவரை ஆதரிக்கிறேன் என்று எச். ராஜா பேசினார்.

தலைப்பு செய்திகள்

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை எவ்வளவு தெரியுமா? முதல் நாள் முழு விவரம்!
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை எவ்வளவு தெரியுமா? முதல் நாள் முழு விவரம்!
மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget