மேலும் அறிய

மதுரை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு 

பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

மதுரை தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி கிராமத்தை சேர்ந்த பண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு  குழி தோண்டிய போது பெரிய பாணை இருப்பதாக அவ்வூரே சேர்ந்த கணேசன் என்பவர் தகவலின்படி  பாண்டியநாடு பண்பாட்டு மையம் தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது. உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜ் அவர்களுக்கு  தகவல் கொடுக்கப்பட்டு  நேரடியாக களத்திற்கு வந்து அவர் முதுமக்கள் தாழி கைப்பற்றி கிராம நிர்வாக  அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  து. முனீஸ்வரன் கூறியாதாவாது: இன்றைய தமிழ் சமூகத்தில் இறப்பு சடங்கு முறைக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக பெருங்கற்கால  ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போட்டுவிடுவார்கள். அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக உண்டப்பின்பு  அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ  (V) வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர்கள். முதுமக்கள் தாழி பொதுவாக தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தாய் குறியீடு என்பது மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன்  நம்பினார்கள். ஆகவே தாழியின் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றைப் போன்ற அமைக்கப்பட்டிருக்கிறது.

மதுரை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு 
 
நல்லமரம் முதுமக்கள் தாழி:
 
நல்லமரம் கிராமத்தில் கண்டறியப்பட்ட  முதுமக்கள் தாழி மேற்குப்பகுதியில் உடைந்த நிலையில்  கிட்டத்தட்ட 7 அடி அழம் குழித் தோண்டும் போது கண்டறியப்பட்டது. முதுமக்கள் தாழியின்  கழுத்துப்பகுதியில்  வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது. குறிப்பாக முதுமக்கள் தாழியின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி , சுற்றளவு 6.1 அடி, விட்டம் 1.5 அடி கொண்டதாகும். இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைகள் ஓடுகள், உடைந்து நிலையில்  உள்ளது. இவைபானை மேல்பகுதி மெல்லிய பானையால் மூடப்பட்டிருக்கலாம். 

மதுரை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு 
 
எலும்புகள் :
 
முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு மேல்பகுதி, கை கால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன.   இப்பகுதியில் பெருங்கற்கால பண்பாடு முறை இருந்தற்கான சான்றாக கண்டறியப்பட் முதுமக்கள் தாழி காணப்படுகின்றது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கின்ற பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.
 
 

தலைப்பு செய்திகள்

காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Embed widget