மேலும் அறிய
Madurai Hc ; மதுரையின் பழங்கால சமண சின்னங்களைப் பாதுகாப்பது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதள் உத்தரவு !
சமண தலங்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரிட்டாபட்டி கிராமம்
மதுரை மாவட்டத்தில் உள்ள சமண தலங்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரையில் தொல்லியல் சுற்றுலா
கோயில் நகரம் மதுரையில் பல்வேறு பழங்கால நினைவுச் சின்னங்கள் உள்ளது. கீழடியைப் போல பல பெருமைகளை கொண்டுள்ள மதுரை, தொல்லியல் தலங்களையும் கொண்டுள்ளது. பல்வேறு இடங்கள் பலரும் அறியாத சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இதில் பல இடங்கள் சேதமடைந்து வருகிறது. மது அருந்தும் நபர்களுக்கும், குற்றவாளிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இந்நிலையில் மதுரையின் பழங்கால சின்னங்களை பாதுகாக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சமண சின்னங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் - நீதிமன்றத்தில் மனு
மதுரையை சேர்ந்த எஸ்.ஆனந்தராஜ், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நலமனுவில்...” மதுரை மாவட்டத்தில் உள்ள பழமையானசமண குகைகளான., யானைமலை, திருப்பரங்குன்றம் கீழவளவு, வரிச்சியூர், கீழகுயில்குடி, அரிட்டாபட்டி, கரடிப்பட்டி, பெருமாள் மலை, கொங்கர்புளியங்குளம்,
விக்ரமங்களம், மாங்குளம் ஆகிய பழங்கால நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் காவலர் உள்ளிட்ட பணியாளர்களை நியமித்து சமண சின்னங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
சமண தலங்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ,மாநில தொல்லியல் துறை அதிகாரிகள், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள சமண தலங்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















