மேலும் அறிய

‘காந்தாரா’ படம் போல தமிழில் ஒரு பிரமாண்ட படம் - விஜய் ஆண்டனி கொடுத்த புதிய அப்டேட்

சினிமா நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு - “உலகம் தோன்றியதில் இருந்து போதை பொருட்கள் உள்ளது” -  விஜய் ஆண்டனி பதில்.

மதுரை மக்களின் அன்பும் இயல்பும் பிடிக்கும். பேரன்பும், பெரும் கோபமும் என்பது போல, இயல்பான, அன்பான மக்கள். - விஜய் ஆண்டனி

மதுரையில் விஜய் ஆண்டனி
 
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக, தனது 12-வது படம் ‘மார்கன்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே சொந்தமாகத் தயாரித்து இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படத்தின் ப்ரமோஷன் பட விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி மதுரைக்கு வருகை தந்தார். நடிகை ப்ரித்திகா, விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் ஆகியோரும் வருகை தந்தனர். மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள  தனியார் மாலில் உள்ள திரையரங்கில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டனர்.
 
செய்தியாளர் சந்திப்பு
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகரும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி..,” மார்கன் படத்தின் இயக்குநர் லியோ ஜான்பால் அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும் ஆகிய படங்களின் விஷுவல் எடிட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் இயக்குனராக ஆவதற்காக என்னை தயாரிக்க கூறி கதை சொன்னார். எனது சகோதரி மகனுக்கு இந்த படத்தில் ஒரு நல்ல வாய்ப்பு இருக்கும் என கூறினார். இதனால் எடிட்டரை ஏன் ஒரு இயக்குனராக மாறக்கூடாது என வாய்ப்பு அளித்ததோடு, எனது சகோதரி மகனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்கன்  படம் அனைவருக்கும் பிடிக்கும்.
 
கிராமத்து சார்ந்த படங்களை ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு ?
 
”விரைவில் அது போன்ற படம் வரும் ஏற்கனவே அண்ணாதுரை, காளி போன்ற படத்தில் நடித்தேன். கன்னடத்தில் எப்படி காந்தாரோ திரைப்படம் வந்ததோ, அதே போன்று ஒரு கிராமத்து கதையை பான் இந்தியா படமாக பிரமாண்டமாக,  எடுக்கவுள்ளேன். அதற்கான  வேலை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் விரைவில் சூட்டிங் தொடங்கும். அதற்கான டைட்டில் இன்னும் வைக்கவில்லை” என்றார்.
 
தற்போது திரையரங்குகளில் ஒரு வாரம் படம் ஓடினாலே சக்சஸ் என கூறுவது குறித்த கேள்விக்கு?
 
முந்தைய காலங்களில் நாளொன்றுக்கு 20ஆயிரம் பேர் படம் பார்ப்பார்கள். தற்போது 20 லட்சம் பேர் ஒரே நாளில் படம் பார்க்கிறார்கள். முன்னாள் 100 நாட்கள் ஓடுகின்ற படங்கள் தற்போது 10 நாட்கள் ஓடினாலே பொருளாதாரம் ரீதியாக போதும்., என்ற அளவிற்கு அதிக அளவு திரையரங்குகள் வந்துள்ளது. வியாபார ரீதியாக முன்னாலில் திரையரங்குகள் மட்டும் இருந்தது. தற்பொழுது சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் திரையரங்குகள் என இருக்கும் காரணங்களால் ஒரு வாரம்  ஓடினாலே சக்சஸ் என்ற சொல்லக்கூடிய நிலை உள்ளது.
 
நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி கைதாகுவது குறித்த கேள்விக்கு? 
 
உலகம் கண்டுபிடித்ததில் இருந்தே போதை பொருள் உள்ளது. சிகரெட் பிடிப்பதை அடுத்த வெர்சன் தான் போதைப்பொருள். அந்த நடிகரை  பிடித்திருக்கிறார்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.
 
இசையமைப்பாளராக  மீண்டும் இசையமைக்கவுள்ளீர்களா ? என்ற கேள்விக்கு
 
10 ஆண்டுகளாக இடைவெளி விட்டு இசையமைக்காத நிலையில் மீண்டும் இசை அமைக்க உள்ளேன். விஜய் ஆண்டனிக்கு சில படங்கள் தான் செட் ஆகும். ஓப்பனிங் சாங்  ஆட முடியாது. அனுஷ்காவுடன் டூயட் பாட முடியாது. இதையெல்லாம் பாடுவதற்கு பெரிய ஸ்டார்களால் மட்டும் தான் முடியும். சக்தி திருமகன் படம் நன்றாக வந்தால் மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்கலாம், என நினைக்கிறேன். இல்லையென்றால் இசை அமைக்கலாம் என முடிவில் உள்ளேன் என்றார்.
 
அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு?
 
அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்கான அறிவுகள் என்னிடம் இல்லை. எனக்கு 50 வயது ஆகிவிட்டது. வட்டம், மாவட்டம் என அரசியல் பத்தி எதுவும் தெரியாது. இன்னும் மக்களை பார்த்து சந்தித்து புரிந்து கொள்ள வேண்டும். 
 
மதுரையில் உங்களுக்கு பிடித்தது என்ன என்பது குறித்த கேள்விக்கு?
 
மதுரையின் சாப்பாடு ரொம்ப பிடிக்கும். மதுரை மக்களின் அன்பும் இயல்பும் பிடிக்கும். பேரன்பும் பெரும் கோபமும் என்பது போல இயல்பான, அன்பான மக்கள், மதுரை மக்கள். சென்னையை விட உணவு பொருட்கள் 5 மடங்கு குறைவான விலையில் கிடைக்கும். கள்ளழகர் சித்திரைத் திருவிழாவுக்கு வைப்பான பாடல் அமைப்பேன் என்றார்.
 
உங்களுடைய படங்களுக்கு டைட்டில் வித்தியாசமாக வைப்பது ஏன் என்ற கேள்விக்கு?
 
ராகு, கேது, நல்லது, கெட்டது என எதுவும் எனக்கு கிடையாது. வேலை மட்டும் தான். மனசு மட்டும் தான். எனவே, இந்த விஷயங்களை நான் நம்பாததால், எனக்கு இது போன்ற டைட்டில்கள் கிடைக்கிறது. எனது படத்துக்கான டைட்டில் பொருத்தமானதாக இருக்க வேண்டும், என நினைப்பேன். கிடைத்ததெல்லாம் வைக்க மாட்டேன் என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget