மேலும் அறிய

அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என செல்லூர் ராஜூ விரும்புகிறாரா? - மதுரையில் பேட்டி

”தியாகம் செய்த வளர்த்த கட்சி அதிமுக. பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும்” - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் பேட்டி.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” மின் கட்டண உயர்வால் தி.மு.க., அரசு தமிழக மக்களை கசக்கி பிழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.க., அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று இரண்டை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள். முழு பூசணிக்காயை குண்டா சட்டிக்குள் மறைக்க பார்க்கின்றனர். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் என கூறுகின்றனர். மக்களே சொல்கின்றனர் தி.மு.க., எதுவும் செய்யவில்லையென்று.

வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். தி.மு.க., அரசு எதையுமே செய்யாமல் வாக்களித்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர். வாக்களித்த மக்கள் இந்த ஆட்சி பிடிக்கவில்லை வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என  சட்டம் இருந்தால் தி.மு.க., அரசு மாற்றப்பட்டு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க., மக்களால் கொண்டு வரப்படும். அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என மக்கள் ஏங்கிக்கொண்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு துன்பம் துயரம் நிறைந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை நடக்கிறது. கொரானா போனால் குரங்கம்மை வருகிறது. தி.மு.க., ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும். ஆனால் துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என செல்லூர் ராஜூ விரும்புகிறாரா?  - மதுரையில்  பேட்டி
 
மின்சார வெட்டு இருக்கும் போது மின்சார கட்டண உயர்வு வேறா. ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசை குறைசொல்லி, எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது தி.மு.க., அடிமை அரசாக உள்ளது. கேட்டால் திராவிட மாடல் அரசு எனச்சொல்லுவது கேலிக்கூத்தாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வரி உயர்வுக்கு அட்டையை பிடித்து நின்ற ஸ்டாலினின் தற்போதைய ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்றால் மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. ஒரு சீட் இரண்டு சீட் தி.மு.க., தற்போது கூட்டணி பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துள்ளனர். எங்கள் கட்சியில் உள்ள பிரச்னையை நாங்கள் எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு பொதுச்செயலாளர் ஆக்கி உள்ளோம். தற்போதே நாளைக்கே தேர்தல் வைக்கச்சொல்லுங்கள். தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., சொல்லி ஆட்சியை வாபஸ் பெறுகிறோம் என ஸ்பெஷல் ஆக கூறி மீண்டும் தேர்தல் நடத்துங்கள். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம்.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என செல்லூர் ராஜூ விரும்புகிறாரா?  - மதுரையில்  பேட்டி
கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு மோசமான விபத்து. ஸ்ரீமதி விவகாரத்தில் வேகமாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. தூங்கிக்கொண்டுள்ள அரசாங்கம் தி.மு.க., அரசு. காலையில் பள்ளி நிர்வாகம் மீது தவறில்லை என டி.ஜி.பி., கூறிவிட்டு மாலையில் 3 பேரை கைது செய்கிறார். ஆட்சியர், எஸ்.பியை நீக்கம் செய்கிறார்கள். தும்பை விட்டு வாலை பிடிக்கும் அரசாக தி.மு.க., உள்ளது. சென்னைக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய அரசு மதுரைக்கு நிதி ஒதுக்கவில்லை. ஒரு சமூகத்தை விட்டு நீக்கயவருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த சமுதாயம் ஏமாறக்கூடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம். உதயகுமார் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்பவர். நல்ல சட்டமன்ற உறுப்பினர். தென் மாவட்டத்தை சேந்த உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆனது பெருமை அளிக்கிறது. அ.தி.மு.க., எப்போதும் சாதி மத இன பாகுபாடு பார்க்காத கட்சி. அ.தி.மு.க., ஒன்றாகத்தான் உள்ளது. தொண்டர்கள் நிர்வாகிகள் ஒன்றாகத்தான் உள்ளோம்.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வேண்டும் என செல்லூர் ராஜூ விரும்புகிறாரா?  - மதுரையில்  பேட்டி
 
ஓ.பி.எஸ்., எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்த கேள்விக்கு,
 
பல இன்னல்களிடயே அ.தி.மு.க., வளர்ந்தது. எம்.ஜி.ஆர்.,, ஜெயலலிதா காலம் தொட்டே அ.தி.மு.க., பல்வேறு பிரச்னைகளிடையே வளர்ந்து தொண்டர்களால் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.,வில் பல்வேறு காலகட்டங்களில் பிரிந்து சென்ற தலைவர்கள் திரும்பி வருவது உண்டு. ஆர்.எம்.வீரப்பன் தொடங்கி கண்ணப்பன் வரை கட்சியை விட்டு சென்றுவிட்டு திருப்பி வந்துள்ளனர். அவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. தியாகம் செய்த வளர்த்த கட்சி அதிமுக. பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் பெறுவோம் எனக்கூறி மாணவர்களை தி.மு.க., அரசு திரும்ப திரும்ப ஏமாற்ற வேண்டாம்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget