crime: மானாமதுரையில் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
குற்றச்சாட்டப்பட்ட தமிழ் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரஹாம் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர், கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ செவித்திற் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருவார் ஆல்பர்ட் ஆப்ரஹாம் இவர் கடந்த 10 வருடமாக இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லைக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்யக்கோரி காது கேளாதோர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆசிரியர் ஆல்பர்ட் அப்ரஹாம் கைது செய்யப்பட்டுள்ளார்.@svgsocialmedia | @s_palani pic.twitter.com/lsjGiNTkY3
— Arunchinna (@iamarunchinna) July 19, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்