Karuppaswamy Kumbabishekam : வெகு விமரிசையாக நடைபெற்றது, பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோயிலின் கும்பாபிஷேக விழா
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை உசிலம்பட்டியில் பட்டபகலில் வீட்டில் இருந்த சிறுமியை திசை திருப்பி, வீடு புகுந்து 8 லட்சம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டியில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் pic.twitter.com/uthY21DepO
— arunchinna (@arunreporter92) August 27, 2023
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை புனரமைப்பு செய்து, 7 அடியில் கருப்பசாமி சிலையும், 21 அடியில் கோபுரமும் எழுப்பப்பட்டு கும்பாபிஷேக நேற்று பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் முதல் சிவாச்சாரியார்கள் மூன்று கால யாக பூஜைகள் செய்தனர்., தொடர்ந்து காலை வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,
உசிலம்பட்டி குறித்த மேலும் செய்திகள் படிக்க - மதுரை கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா; ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட 500 கிலோ மலர் - கோவிந்தா முழக்கத்தில் பக்தர்கள்
தொடர்ந்து கருப்பசாமி சிலைக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது., உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இது குறித்து உசிலை செந்தில் கூறுகையில், “உசிலம்பட்டி பகுதியில் ஏராளமான சிறு தெய்வங்கள் உள்ளன. இதனால் இங்கு ஆன்மீக நிகழ்வுகள் பெரிதாக பார்க்கப்படுகிறது. அதிகளவு பாரம்பரிய திருவிழாக்கள் கொண்டாடப்படுவதும் வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டி அருகே வாகைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கல்யாண கருப்பசாமி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் புனித நீர் ஊற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் 500 கிலோ மலர் தூவப்பட்டது, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படி ஆன்மீகத்திற்கு உசிலம்பட்டி மக்கள் முக்கியதுவம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வளையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முரண்ட கருப்பசாமி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை புனரமைப்பு செய்து, 7 அடியில் கருப்பசாமி சிலையும், 21 அடியில் கோபுரமும் எழுப்பப்பட்டு கும்பாபிஷேக பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நானும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. திருவிழாவில் அன்னதான நிகழ்வு நடைபெற்றதும் குறிப்பிடதக்கது” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - RB Udayakumar: மாநாடு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், மீதமான புளியோதரை பற்றி பேசுகின்றனர் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
மேலும் ஆன்மிக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மேலமங்கநல்லூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா - ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்
மதுரை மாவட்ட செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai Train Fire Accident: மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள்.. பிடித்து பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை!