மேலும் அறிய
Advertisement
Madurai Crime : சிறுமியை திசை திருப்பி, வீடு புகுந்த கொள்ளையர்கள்.. 8 லட்சம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகைகள் கொள்ளை !
அடுத்தடுத்து அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் உசிலம்பட்டி பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
உசிலம்பட்டியில் பட்டபகலில் வீட்டில் இருந்த சிறுமியை திசை திருப்பி, வீடு புகுந்து 8 லட்சம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டியில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் புது ராஜா - கீதா லெட்சுமி தம்பதி, புதுராஜா செல் போன் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி கீதா லெட்சுமி தேனி மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று பகலில் வேலைக்கு சென்றிருத்த நிலையில் இவர்களது 12 வயது மகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் பகல் 1 மணியளவில் புதுராஜா வீட்டிற்கு வந்த ஜோசியம் பார்க்கும் நான்கு பெண்கள் குடிநீர் கேட்பது போல புதுராஜாவின் மகளிடம் பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் நுழைந்து பிரோவில் இருந்த 8 லட்சம் ரொக்கம் மற்றும் 11 1/2 (பதினொன்றரை) பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.
மதுரை உசிலம்பட்டியில் பட்டபகலில் வீட்டில் இருந்த சிறுமியை திசை திருப்பி, வீடு புகுந்து 8 லட்சம் ரொக்கம் மற்றும் 11 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டியில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் pic.twitter.com/uthY21DepO
— arunchinna (@arunreporter92) August 27, 2023
வழக்கம் போல இரவு வீட்டிற்கு வந்த புதுராஜா - கீதா லெட்சுமி தம்பதி வீட்டின் பிரோ திறந்திருப்பதை கண்டு சோதனை செய்த போது அதில் இருந்த பணம் நகை கொள்ளையடிக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது மகளிடம் கேட்ட போது ஜோசியம் பார்க்கும் பெண்கள் குடிநீர் கேட்டு வீட்டிற்கு வந்ததை தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் குறித்து புதுராஜா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சாதுவாக அந்த பகுதிக்குள் வந்த ஜோசியம் பார்க்கும் நான்கு பெண்களும், புதுராஜா வீட்டிற்கு சென்ற பின்பு வேக வேகமாக இந்த இடத்திலிருந்து வெளியேறி சென்ற காட்சிகள் கிடைத்துள்ளன. இந்த சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோசியம் பார்ப்பது போல வந்து நான்கு பெண்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., மேலும் உசிலம்பட்டி பகுதியில் அடுத்தடுத்து ஒன்றரை மாதத்தில் 5வது கொள்ளை சம்பவமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடுத்தடுத்து அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் உசிலம்பட்டி பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: ”ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உண்டா?.." கிழித்து தொங்கவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
மேலும் செய்திகள் படிக்க - Madurai Train Accident: மதுரை கொடூர விபத்து..! லக்னோ செல்லும் சென்னை விமான நிலையம் வந்த உடல்கள் ..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion