மேலும் அறிய
Advertisement
தன்னார்வ அமைப்புகளால் கண்மாய் தூர்வாரும் பணி - தொடங்கி வைத்த உசிலம்பட்டி எம்எல்ஏ
விரைவில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பல கண்மாய்களை இதே போன்று சுத்தம் செய்ய இருப்பதாகவும் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
உசிலம்பட்டி அருகே தன்னார்வ அமைப்புகளால் கண்மாய் தூர்வாரும் பணி - எம்எல்ஏ அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
கண்மாய் தூர்வாரும் உசிலம்பட்டி
உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் போதிய நீர் இல்லாததால் வறட்சி நிலவுகிறது. எனவே கண்மாய், குளங்களில் தண்ணீரை சேமிப்பது அவசியமாக இருக்கிறது. அதனால் உசிலம்பட்டி பகுதி மக்கள் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தாங்களே தூர்வார முடிவு செய்து அதனை முடிக்கின்றனர். ஏற்கனவே வளையன்குளம் கண்மாயையில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ., இணைந்து தூர்வாரும் பணியை செய்து முடித்தனர். கண்மாயை தூர்வாருவதால் பல்வேறு கிராமங்களுக்கும், விவசாய பகுதிக்கும், கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் பயன்படுகிறது. மேலும் கண்மாயை சுற்றியுள்ள கிராங்களுக்கு போதுமான நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது. இதனால் உசிலம்பட்டி பகுதி மக்கள் இப்படி சொந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டியில் தன்னார்வ அமைப்புகளால் பந்தானி கண்மாய் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதனை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
பந்தானி கண்மாய் தூர்வாரும் பணி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது பந்தானி கண்மாய். இக்கண்மாய் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயை தூர்வார உசிலை நகர அரிமா சங்கம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், உசிலை வளர்ச்சி மையம், 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் இனைந்து இப்பணிகளை தொடங்கியுள்ளனர். தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. அரிமா சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் பொறியாளர் அறிவழகன் தலைமையில், பசுக்காரன்பட்டி ஊர் மக்கள் முன்னிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.
உசிலம்பட்டி பகுதி கண்மாய்கள் தூர்வாரப்படும் - எம்.எல்.ஏ உறுதி
விரைவில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பல கண்மாய்களை இதே போன்று சுத்தம் செய்ய இருப்பதாகவும் எம்.எல்.ஏ தெரிவித்தார். இதில் உசிலை வளர்ச்சி மையம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய நிர்வாகிகள், அரிமா சங்கத்தினர், 58 கிராம பாசன விவசாயிகள் எக்னோரா நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rohit Sharma: டி 20 உலகக் கோப்பை வெற்றிக் உதவியது அந்த மூன்று பேர் தான்.. ரோஹித் ஷர்மா ஓபன் டாக்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”வீட்டில் செல்வம் சேர, TNPSC -UPSC தேர்வுகளில் வெற்றிபெற” - ஜாதகம் கூறுவது என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion